சனி, ஜூன் 11, 2011

தேவதையுடன் அபு பின் அத்ஹம்


Post by akaleel on Thu Apr 28, 2011 11:58 am
அன்றொரு யாமத்தில் 
அயர்ந்த தூக்கத்தில்
 
அபு பின் அத்ஹம்
அடங்கிக் கிடந்தார்

வெள்ளி நிலவொளி
 
வீடெங்கும் நிறைந்திட
 
துள்ளிக் கண் விழித்தார்
 
கனவுக்குள்ளே அன்பர் அபு

வெண்முல்லை மலரொன்று
பெண் வடிவெடுத்தாற்ப் போல்
 
தண்ணொளி வீசி அங்கே
 
தம்முன்னே நிற்க்கக் கண்டார்
 

மாசற்ற ஒளியின் கையில் காகிதப் பட்டை
நீசனையும் காக்கும் இறை
 
நேசத்திற்க் குறியோர் பெயரை
 
பாசத்தோடெழுதி வந்தேன் படிக்கிறேன் கேட்கிறாயா?
 

படித்து முடித்து பறந்திடும் முன்னே
 
துடித்து அருகில் அணுகிக் கேட்டார்
 
பாவி எந்தன் பெயருண்டோ அதில்?
கூவிச் சொன்னது தேவதை "இல்லை அபு"

கண்ணீருடனே கையிரண்டேந்தி
 
கல்பு கூட்டி கடவுளைக் கேட்டார்
 
தண்ணொளிப் பெண்ணும் பட்டியலும்
 
தன் பெயர் தாங்கி மீண்டும் வருமா?

முல்லைப் பூவின் கொள்ளை வசம்
 
மூலை முடுக்கெலாம் ஒளிப் பிரகாசம் இரண்டாம் இரவில்
 
பட்டியல் காட்டிப் படபடத்தது தேவதை
 
படிக்கும் முன்னே பாசமாய் சொன்னது

மானிடர் தம்முடன் பிறரையும் பேணி
 
ஊனும் உடையும் உரையுளும் தந்து
 
கருணை காட்டி கவலை போக்கிய
 
காருண்யர்களை காட்டும் பட்டியல்

வாசித்து முடித்தபின் தேவதையும்
 
வழக்கம் போல் சொன்னது அபுவிடத்தில்
 
மானுடனை நேசித்தோர் வரிசையிலும்
 
மறுபடியும் பார்த்து விட்டேன் உன் பேர் இல்லை.

சிந்தனைச் சிலந்தி வலை சிக்கலை ஏற்படுத்தும்
 
கடமையை செய்வோம் கவலையை மறப்போம்
 
எரிகின்ற சுடரின் ஒளியினைப் போல எனப்
 
புரிந்துணர்ந்து மறந்து போனார் அனைத்தும் அன்றே
 

உறங்கினார் அபு கவலையின்றி
 
இறங்கினால் தேவதை மொன்றம் நாளில் கையில் என்ன?
பட்டொளி விசிடப் பொன்னால் பட்டயம்
 
நீட்டி அவரிடம் சட்டென வாசித்தாள்
 

அண்டப் பெருவெளி அனைத்து சர்வமும்
 
ஆளும் இறைவனின் வாஞ்சைக்குறிய
 
அன்பர் ஒருவரின் அழகிய பெயர் இதில்
 
அபு பின் அத்ஹம்
 அது நீர் தான் நீர் மட்டும் தான். 

அப்துல்லாஹ் சார்
 
அல்கோபர்

Post by akaleel on Thu Apr 28, 2011 11:58 am
அன்றொரு யாமத்தில் 
அயர்ந்த தூக்கத்தில்
 
அபு பின் அத்ஹம்
அடங்கிக் கிடந்தார்

வெள்ளி நிலவொளி
 
வீடெங்கும் நிறைந்திட
 
துள்ளிக் கண் விழித்தார்
 
கனவுக்குள்ளே அன்பர் அபு

வெண்முல்லை மலரொன்று
பெண் வடிவெடுத்தாற்ப் போல்
 
தண்ணொளி வீசி அங்கே
 
தம்முன்னே நிற்க்கக் கண்டார்
 

மாசற்ற ஒளியின் கையில் காகிதப் பட்டை
நீசனையும் காக்கும் இறை
 
நேசத்திற்க் குறியோர் பெயரை
 
பாசத்தோடெழுதி வந்தேன் படிக்கிறேன் கேட்கிறாயா?
 

படித்து முடித்து பறந்திடும் முன்னே
 
துடித்து அருகில் அணுகிக் கேட்டார்
 
பாவி எந்தன் பெயருண்டோ அதில்?
கூவிச் சொன்னது தேவதை "இல்லை அபு"

கண்ணீருடனே கையிரண்டேந்தி
 
கல்பு கூட்டி கடவுளைக் கேட்டார்
 
தண்ணொளிப் பெண்ணும் பட்டியலும்
 
தன் பெயர் தாங்கி மீண்டும் வருமா?

முல்லைப் பூவின் கொள்ளை வசம்
 
மூலை முடுக்கெலாம் ஒளிப் பிரகாசம் இரண்டாம் இரவில்
 
பட்டியல் காட்டிப் படபடத்தது தேவதை
 
படிக்கும் முன்னே பாசமாய் சொன்னது

மானிடர் தம்முடன் பிறரையும் பேணி
 
ஊனும் உடையும் உரையுளும் தந்து
 
கருணை காட்டி கவலை போக்கிய
 
காருண்யர்களை காட்டும் பட்டியல்

வாசித்து முடித்தபின் தேவதையும்
 
வழக்கம் போல் சொன்னது அபுவிடத்தில்
 
மானுடனை நேசித்தோர் வரிசையிலும்
 
மறுபடியும் பார்த்து விட்டேன் உன் பேர் இல்லை.

சிந்தனைச் சிலந்தி வலை சிக்கலை ஏற்படுத்தும்
 
கடமையை செய்வோம் கவலையை மறப்போம்
 
எரிகின்ற சுடரின் ஒளியினைப் போல எனப்
 
புரிந்துணர்ந்து மறந்து போனார் அனைத்தும் அன்றே
 

உறங்கினார் அபு கவலையின்றி
 
இறங்கினால் தேவதை மொன்றம் நாளில் கையில் என்ன?
பட்டொளி விசிடப் பொன்னால் பட்டயம்
 
நீட்டி அவரிடம் சட்டென வாசித்தாள்
 

அண்டப் பெருவெளி அனைத்து சர்வமும்
 
ஆளும் இறைவனின் வாஞ்சைக்குறிய
 
அன்பர் ஒருவரின் அழகிய பெயர் இதில்
 
அபு பின் அத்ஹம்
 அது நீர் தான் நீர் மட்டும் தான். 

அப்துல்லாஹ் சார்
 
அல்கோபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...