திங்கள், செப்டம்பர் 12, 2011

உறவுகளைக் காணவில்லை





















பனிரண்டு வயசிலும் எனை இடுப்பில் சுமந்து
கண்கொத்திப் பாம்பாய் என் நல்லது கெட்டதுகளை 
எனக்குச்சொல்லிய என் மீது உயிராய் இருந்து 
பாசத்தை எனக்கு மட்டும் அளித்த 
உம்மாவைக் காணவில்லை 
அவளுக்கு இப்போது பேரன் பேத்திகள் 
தான் உலகமாயிற்று 

தோழி தந்த தின் பண்டத்தை ஒளித்து வைத்து
என் தம்பி ஆசையாய் தின்பான் என்றும்
அங்கே போகாதே அதைச் செய்யாதே...
என் வேலியாய் எனைச் சூழ்ந்து என்னைப் பேணி
அன்புடன் கவனித்த அக்காவையும் காணவில்லை
அவளுக்குத தன வீடு தன்கணவர் மற்றும் தன்பிள்ளைகள்
தான் உலகமாயிற்று

எங்கெல்லாம் சுற்றினாலும் என்னையும் கைசேர்த்து
விளையாட பள்ளிக்கூடம் சினிமா கடைவீதி
பங்கு வைத்து பகிர்ந்து தின்ற பண்டங்கள் 
எச்சில் நனைந்த இத்தனை நினைவுகளும் 
நட்புடன் பகிர்ந்த நண்பர்களைக் காணோம்
பணியும் பிணியும் பிள்ளைகளும் மனைவியுமாய்
அவர்களின் உலகம் மாறிவிட்டது...

என் தம்பி என் உயிர் அவன் எங்கள் செல்லம்
தன் காசையும் எனக்குத் தந்து செலவு செய்வதை 
ஆசையுடன் கண்டு வாஞ்சையுடன் எனை வளர்த்த 
அண்ணன் அவனது இரக்க குணமுள்ள அன்பு 
இவையெல்லாம் போன இடம் தெரியவில்லை
அவனுக்கு அவன் மனைவி அவன் பிள்ளைகள் 
அவனை பதினாறு ஆண்டுகளாக சந்திக்க கூடஇல்லை 

 நாலணாவுக்கு கடன் தந்தாலும் திருப்பிக் கேட்காத 
அத்தா கடையும் இல்லை அவரது அன்பும் இல்லை 
நல்லம்மாவின் வெற்றிலை எச்சில் படிந்த 
எங்கள் வீ ட்டு சுவர் கூட இன்று இல்லை 
திண்ணையில் பாய் விரித்து அமர்ந்து திட்டினாலும்
எனக்கு அரபு பாடத்தை அன்பாய் கற்றுத்தந்த நல்லாப்பா 
ஒரு நாளைக்கு பள்ளிக்கு வராவிட்டாலும் 
வீட்டுக்கு ஓடிவந்து விவரம் சொல்லி என்னை 
அடித்தாலும் அன்பொழுகக் கற்றுத்தந்த ஆசிரியர்கள் 
யாரும் இன்று என்னுடன் அப்படி இல்லை...

அவர்கள் என்னிடம் விதைத்துச் சென்ற அன்பு மட்டும் 
ஈரம் காயாமல் அப்படியே அடிநெஞ்சில் உண்டு...
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய 
அந்த வானவில்லை இப்போது காணவில்லை...




















பனிரண்டு வயசிலும் எனை இடுப்பில் சுமந்து
கண்கொத்திப் பாம்பாய் என் நல்லது கெட்டதுகளை 
எனக்குச்சொல்லிய என் மீது உயிராய் இருந்து 
பாசத்தை எனக்கு மட்டும் அளித்த 
உம்மாவைக் காணவில்லை 
அவளுக்கு இப்போது பேரன் பேத்திகள் 
தான் உலகமாயிற்று 

தோழி தந்த தின் பண்டத்தை ஒளித்து வைத்து
என் தம்பி ஆசையாய் தின்பான் என்றும்
அங்கே போகாதே அதைச் செய்யாதே...
என் வேலியாய் எனைச் சூழ்ந்து என்னைப் பேணி
அன்புடன் கவனித்த அக்காவையும் காணவில்லை
அவளுக்குத தன வீடு தன்கணவர் மற்றும் தன்பிள்ளைகள்
தான் உலகமாயிற்று

எங்கெல்லாம் சுற்றினாலும் என்னையும் கைசேர்த்து
விளையாட பள்ளிக்கூடம் சினிமா கடைவீதி
பங்கு வைத்து பகிர்ந்து தின்ற பண்டங்கள் 
எச்சில் நனைந்த இத்தனை நினைவுகளும் 
நட்புடன் பகிர்ந்த நண்பர்களைக் காணோம்
பணியும் பிணியும் பிள்ளைகளும் மனைவியுமாய்
அவர்களின் உலகம் மாறிவிட்டது...

என் தம்பி என் உயிர் அவன் எங்கள் செல்லம்
தன் காசையும் எனக்குத் தந்து செலவு செய்வதை 
ஆசையுடன் கண்டு வாஞ்சையுடன் எனை வளர்த்த 
அண்ணன் அவனது இரக்க குணமுள்ள அன்பு 
இவையெல்லாம் போன இடம் தெரியவில்லை
அவனுக்கு அவன் மனைவி அவன் பிள்ளைகள் 
அவனை பதினாறு ஆண்டுகளாக சந்திக்க கூடஇல்லை 

 நாலணாவுக்கு கடன் தந்தாலும் திருப்பிக் கேட்காத 
அத்தா கடையும் இல்லை அவரது அன்பும் இல்லை 
நல்லம்மாவின் வெற்றிலை எச்சில் படிந்த 
எங்கள் வீ ட்டு சுவர் கூட இன்று இல்லை 
திண்ணையில் பாய் விரித்து அமர்ந்து திட்டினாலும்
எனக்கு அரபு பாடத்தை அன்பாய் கற்றுத்தந்த நல்லாப்பா 
ஒரு நாளைக்கு பள்ளிக்கு வராவிட்டாலும் 
வீட்டுக்கு ஓடிவந்து விவரம் சொல்லி என்னை 
அடித்தாலும் அன்பொழுகக் கற்றுத்தந்த ஆசிரியர்கள் 
யாரும் இன்று என்னுடன் அப்படி இல்லை...

அவர்கள் என்னிடம் விதைத்துச் சென்ற அன்பு மட்டும் 
ஈரம் காயாமல் அப்படியே அடிநெஞ்சில் உண்டு...
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய 
அந்த வானவில்லை இப்போது காணவில்லை...

5 கருத்துகள்:

  1. பணியும் பிணியும் பிள்ளைகளும் மனைவியுமாய்
    அவர்களின் உலகம் மாறிவிட்டது...


    மிக அழகாச் சொல்லியிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  2. என்தன் ஆழ்மனதிலும் அலையடிக்கவைத்த உணர்வு அலைகளாய் கவிதைகள்...


    அருமை.

    பதிலளிநீக்கு
  3. உங்களின் பின்னுட்டம் என் மனதில் தூண்டிவிட்ட மின்னுட்டம் போலத்தான் உறவே.. அன்புக்கும் அரவனைப்புக்கும் அன்பு நன்றி....

    பதிலளிநீக்கு
  4. http://www.kalaitamilmutram.com/viewtopic.php?f=18&t=82

    கலைத்தமிழ்முற்றத்தில் சகோதரி மஞ்சுபாஷினி...
    ஒரு குழந்தை சட்டுனு தன் அம்மாவை காணோம்னு அழறது....

    சிறுவயது நண்பர்களுடன் மலர்ந்த
    தன் நட்பினை காணோம்னு பதறுகிறது....

    தன் அண்ணா எங்கேன்னு தேடுகிறது....
    அக்காவை தேடி அலைகிறது....

    நாம எல்லோருமே இப்படி ஒரு கட்டம் தாண்டி வரவேண்டியதாகிவிடுகிறது இல்லையா அப்துல்லாஹ் சார்?

    எல்லாரும் அவங்க அவங்களுக்குன்னு ஒரு குடும்பம் அமைந்துவிடும்போது மற்றதை சிந்திக்க டைம் எங்கே? இயந்திர உலகில் நம்மைப்பற்றி யோசிக்கவே நேரம் கிடைக்காமல் போகும்போது பழகிய நட்பு, சிறுவயதில் அடித்து விளையாடிய சகோதரி, பாசம் செலுத்திய அண்ணன், வாஞ்சையாக உணவு ஊட்டிய தாய் இவங்கல்லாரும் உங்களை நினைக்க எங்கப்பா நேரம் கிடைக்க போறது?

    வயோதிகம் வரும்போது தான் மனசு விரிய ஆரம்பிக்கும்...
    மனசு விரிய ஆரம்பிக்கும்போது பழையதை அசைபோடும்...
    பழையதை அசைபோடும்போது ஏக்கம் தொடங்கும்...
    ஏக்கம் தொடங்கிவிட்டால் இதோ இதுபோன்ற அருமையான மலரும் நினைவுகள் கவிதை வரிகள் எமக்கு படிக்க கிடைக்கும்....

    எளிய நடையில் இத்தனை அழகாக எல்லாருமே படிக்கும்போது சட்டுனு அந்த அம்மா நட்பு சகோதர வட்டத்துக்குள் தன்னை இணைத்துக்கொண்டு ஐயோ நானும் அப்டி தானே அப்டின்னு சட்டுனு தலைகுனிய வைத்துவிடுகிறது சங்கடத்துடன்...

    அன்பை மறுக்காதது மட்டுமல்ல
    அன்பை மறந்தாலும் தப்பு தப்பு தான்னு அழுத்தமா சொல்ற மிக அருமையான கவிதை அப்துல்லாஹ் சார்..

    இப்படி இத்தனை அன்புடன் இருந்துவிட்டு திடிர்னு தூரமாகிவிட்டால் எத்தனை கஷ்டமா இருக்குன்னு சொல்லும்போதே அதனுடன் அவங்க தந்த அன்பையும் மறக்காம மனதில் இருத்தி வைத்திருக்கும் நல்ல உள்ளத்தை கடைசி பத்தி மிக அழகாய் நச் நு முடிச்சிருக்கீங்க...
    எங்கே ரெண்டு நாளா முற்றத்தில் காணோமே உங்களை?

    அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்....

    பதிலளிநீக்கு
  5. சேனை தமிழ் உலாவின் இதயம் என் இனிய நண்பர் சம்சு மனம் திறக்கிறார்... பகிர்கிறேன் என் மகிழ்ச்சியை இங்கு...
    http://www.chenaitamilulaa.net/t21090-topic#200426

    ஒவ்வொரு வரிகளும் ஒன்றோடு ஒன்று இணைந்து முத்தமிட்டுச் செல்கிறது அன்றைய நினைவுகள் இன்று மீட்டுப்பார்க்கும் போதும் சுகமாக அகம் நிறைந்து தாலாட்டிச் செல்கிறது கவிஞரின் வரிகள். பசுமை நினைவுகளை பன்பாய் கவி வடித்து அன்போடு படித்திட சேனையுடன் பகிர்ந்த கவிஞருக்கு வாழ்த்துகள்.

    காலையில் எழுந்தால் வேலை வேலைமுடிந்தால் வீடு மின் விசிரிபோல் சுற்றிக் கொண்டு இருக்கதான் நேரம் போதுமானது அனைவருக்கும்.
    இதில் யாரை குற்றம் சொல்வது.

    தேவைகளும் வேலைகளும் அதிகரித்து விட்டது பழய நினைவுகளை சிந்திக்க நேரம் கிடைப்பது அரிதாகிவிட்டது அப்படியான பசுமை நினைவுகளை பசுமையாக பகிர்ந்த அப்துல்லாஹ் சார் அவர்களுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...