அன்றும் வழக்கம் போல கோலப் பொடியை
எடுத்தவாறு வாசலில் குத்தவைத்தாள் அக்கா
அடுக்கடுக்கான புள்ளிகள் வைத்தாள்
அதனை இலகுவாக இணைக்கவும் செய்தாள்
அவளது விரலின் நளினமும் வளைதலும
பதினெட்டு வயதில் மணம் முடித்து
மச்சானோடு போய் மறுமாசம் திரும்பியவள்
மாமியாரின் மரணத்தினால் மறுபடியும்
கூப்பிடப்படாமல் எங்களோடு வாழ்பவள்..
சில நேரம் அவளது முகம் சோர்ந்து இருக்கும்
அழுதிருப்பாள் போல
வழக்கமாகிவிட்டது
இரண்டே உடுப்புகளை மட்டும்
துவைத்து உடுத்துக் கொள்வாள்.
தனியாகவே இருப்பாள் எதிலும் படமாட்டாள்
சில நேரம் மிகுந்த கோபமாக இருப்பாள்
பெரும்பாலும் அமைதி தான்
நான் நேசிக்கும் அவள்
என் அன்புள்ள அக்கா
அவளின் மனசு நிறைய புள்ளிகள்
இணைக்க முடியாத கோடுகளுடன் இருந்தது
நல்ல ரசனையுள்ள அழகான அக்கா
அவளது கோலத்தைப் போலவே....
சேனை தமிழ் உலா வில் என் நண்பர் கலை நிலா
பதிலளிநீக்குhttp://www.chenaitamilulaa.net/t21103-topic#200287
வாழ்கையின் எதார்த்தம் ,கொண்ட கோலமே உங்கள் மாக்கோலம்!
நமது தெருக்களில்,காணும் காட்சியை ,மட்டும் கருவாய் கொள்ளாமல்,கோலம் போடும் மங்கையின் கோலத்தை,கொண்ட வரிகள் ,பாராட்டதக்கது தோழரே.
சில இடைவெளிக்கு பின் உங்கள் கவிதையை சுவாசிக்க முடிந்தது.தொடருங்கள் உங்கள் பார்வையை!