இன்பமாய்க் கழிய்ம் இனிய தருணங்கள்
இன்னலாய் மாறிடும் விந்தையும் ஏனோ
இன்றெனக் கதன் விடை விளக்கிடுவாரோ
இதுதானோ இவருறவு தவிக்கின்றேன்
கன்னல் மொழி பேசி களிக்கவைத்த நட்பு
கடுமொழி சொல்வதனால் காயந்தான் ஆகாதோ
காற்றில் அலைவழியே என்கல்பை நிறைத்தவனே
தூற்றிய வார்த்தைகண்டு துவண்டு நிற்கின்றேன்
நேசத்தின் பிம்பமாய் உன்நட்பு என்னோடு
வாசத்தின் மலர்ச்செண் டேஉன் மணம் நெஞ்சோடு
பாசத்தின் பனிஊற்றே பரம்பொருளின் நாமத்தானே
பூசல் தான் என்ன புரியாமல் தவிக்கின்றேன்
இதயத்தை உளிகொண்டு இரண்டாகத் திறந்தாலும்
இன்பக்கனியாய் நீ அங்கிருப்பதைக் காண்பாய்
சிதைத்தபின் சேர்ந்திடுமோ சேதமான அவ்விதயம்
சிந்தித் துணர்ந்திடு நட்பின் சூத்திரத்தை
ஆறாத துயரன்றோ அச்சமின்றி நீ செய்தது
சேராத இடம் சேர்ந்து செய்ததன்றோ இப்பிழையும்
நீரடித்து நீர்விலகாதென் றெண்ணி இருந்தேனே
நீர்த்துப் போச் சய்யகோ நம்முறவு இன்றோடு ...
நண்பர்களின் பகல் வேஷம் கலைந்த பின் ஏற்ப்பட்ட பதிப்பு சொல்லும் கவிதை இது .
பதிலளிநீக்குஇன்று நாம் சகோதரனாய் ,நண்பனாய் பழகினாலும் ,இது போன்ற உள்ளம் கொண்ட வெறியர்களுக்கு நாம் அன்னியனே!
உங்கள் வார்த்தைகள் ,உண்மையாய் உதிக்கும் கிழக்கு .
கலைநிலா