சந்தையில் பேரம் பேசி
சடுதியில் பொருளை வாங்கும்
கந்தையாய் போன திங்கே
கன்னியர் கடி மணமும்
முந்தை யவர்தாயும இங்கு
மூலதனம் இட்டே வந்தார்
விந்தையிங்கு ஏதுமில்லை
விதைத்ததே விளைந்ததன்றோ
உந்தையும் தாயும் உன்னை
ஏலத்தில் விட்டார் அன்றே
பந்தைப் போல் சுழன்று நீ யுன்
பிள்ளைக்கும் கேட்பாய் நாளை
விடை இலா வினாக்கள் நெஞ்சில்
விஞ்சியே நிற்குதம்மா
தடையில்லா தவறுகளும்
தன்போக்கில் வளருதம்மா
அழகிய மங்கையரை
அணிகலன் ரொக்கம் காசு
அனைத்தையும் பெற்றுக் கொண்டு
அடையும் அதன பேர் தான் என்ன
நடையுடை பாவனைகள்
நாகரீகம் ஆனபின்பும்
கடைதனில் காளையரை
கூவிக் கூவி விற்பதென்ன
மந்தையாய் ஆட்டுக்கூட்டம்
மனிதரில் நானும்கண்டேன்
சிந்தையைத் தொலைத்தே மண்ணில்
சிறுமதி யை விதைத்தார் காணீர்
வாழையடி வாழையாக இதை
வழக்கமாக்கி வாழுகின்றார்
கோழையிவர் கண்ணிருந்தும்
குருடனன்றோ! நீ சொல்
பணம் பெற்று உடலை விற்கும்
பெண்ணின் தொழில் ஈனம் என்றால்
பணம் பெற்று பிள்ளை விற்கும்
பெற்றவரின் செயலும் விபச்சாரமே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக