தேடாத திரவியமே
தேடி வந்த சித்திரமே
கானகத்தின் குளிர் நிலவே
கானகத்தின் குளிர் நிலவே
கண்மணியின் தண்ணொளியே
சிப்பி சேர்ந்த முத்துப் போல
சிறையிருந்தாய் உதரத்துள்ளில்
நல்ல ஒரு தருணமதில
நானிலத்தில் வந்துதித்தாய்
கையெடுத்து பிள்ளை உன்னை
கண்ணெடுத்து நானும் கண்டேன்
கண்ணிருக்கும் இடத்தில் ரெண்டு
கிண்ணம் மட்டும் உள்ளதய்யா
விழியிழந்த உந்தன் முகம்
ஒளியில்லாமல் போச்சுதய்யா
வழி நடக்க வாய்த்த பாதம்
வலிவில்லாத சோகம் கண்டேன்
விரல்களென்னும் நிட்சியின்றி
விறகு போல கைகள் உண்டு
காதுமடல் வினாக்குறிகள்
காணவில்லை உன்னிடத்தில்
செம்பவழக் கன்னமின்றி
செதில் செதிலாய் கறிப் படலம்
செப்பு வாயின் திறப்பினிலே
செங்குருதி வடியும் காட்சி
சேதமான பாண்டமென்று
செய்தி சொல்லும் அரிய சாட்சி
இதயம் மட்டும் நடுங்குதய்யா
இத்தனைக்கும் நடுவிலே
இது வரைக்கும் நான் சுமந்த
உந்தன் உயிர்க் கூட்டிலே
ஒளிமறந்து ஒலி துறந்து
வலி நிறைந்த வழி கடக்க
பிறப்பெடுத்த பிள்ளை அவன்
சிறப்பானோ இவ் உலகில்
இழிந்தவைகள் காட்சியாக
இன அழிப்பும் ஓலமாக
குருதிச் சேற்றுப் பாதையிலே
கொண்டு நடை பழகுமிந்த
கொலைகார வையகத்தில்
கொண்டாடி வாழ்ந்திடவே
கண்களின்றி காதுமின்றி
கால்களின்றி உதித்தானோ....
என் வயிற்றில்....
சிப்பி சேர்ந்த முத்துப் போல
சிறையிருந்தாய் உதரத்துள்ளில்
நல்ல ஒரு தருணமதில
நானிலத்தில் வந்துதித்தாய்
தேனிலிட்ட சுளை நீ யென்
வானுதித்த தாரகை தான் கையெடுத்து பிள்ளை உன்னை
கண்ணெடுத்து நானும் கண்டேன்
கண்ணிருக்கும் இடத்தில் ரெண்டு
கிண்ணம் மட்டும் உள்ளதய்யா
விழியிழந்த உந்தன் முகம்
ஒளியில்லாமல் போச்சுதய்யா
வழி நடக்க வாய்த்த பாதம்
வலிவில்லாத சோகம் கண்டேன்
விரல்களென்னும் நிட்சியின்றி
விறகு போல கைகள் உண்டு
காதுமடல் வினாக்குறிகள்
காணவில்லை உன்னிடத்தில்
செம்பவழக் கன்னமின்றி
செதில் செதிலாய் கறிப் படலம்
செப்பு வாயின் திறப்பினிலே
செங்குருதி வடியும் காட்சி
சேதமான பாண்டமென்று
செய்தி சொல்லும் அரிய சாட்சி
இதயம் மட்டும் நடுங்குதய்யா
இத்தனைக்கும் நடுவிலே
இது வரைக்கும் நான் சுமந்த
உந்தன் உயிர்க் கூட்டிலே
ஒளிமறந்து ஒலி துறந்து
வலி நிறைந்த வழி கடக்க
பிறப்பெடுத்த பிள்ளை அவன்
சிறப்பானோ இவ் உலகில்
இழிந்தவைகள் காட்சியாக
இன அழிப்பும் ஓலமாக
குருதிச் சேற்றுப் பாதையிலே
கொண்டு நடை பழகுமிந்த
கொலைகார வையகத்தில்
கொண்டாடி வாழ்ந்திடவே
கண்களின்றி காதுமின்றி
கால்களின்றி உதித்தானோ....
என் வயிற்றில்....
சொல்ல வார்த்தைகளில்லை. மனதை இறுக்கமாக்கிவிட்டது உங்கள் கவிதை.
பதிலளிநீக்குஉங்களின் மறுமொழிக்கு நன்றி...
பதிலளிநீக்குமுதலில் நான் அழுகிறேன் (வெட்கத்தால் என்னை ஒளித்துக்கொண்டு)
அதன் தாக்கத்தால்....
என் எழுத்தாணியும் வெட்கத்தை ஒதுக்கி விட்டு ஊர் முன்னிலையில் ஒப்பாரி வைதது ஓலமிட்டு அழுகிறது தாங்காத சோகம் என்னுள்ளே ...