சனி, அக்டோபர் 01, 2011

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்




அதே காலை மாலைப் பொழுதுகள் 
சூரியப் பிரகாசங்களும் 
சந்திர நிழல்களும்...


நல்லதும் கெட்டதுமான 
கடிகார முள்ளின் 
கவனமான ஓட்டம் 


வாங்கித் 
தோற்றவை கொஞ்சம்
விற்றுத் 
தொலைத்தது நிறைய...


இதோ 
இந்தக் கடற்கரையின்
சொரிமாணலில் பாதம் பதித்து 
பையப்பைய என் பக்கத்தில் 


மனதில் நினைக்கும் போதே 
மகிழ்ச்சியை மலர்த்தும் அவள் 


எத்தனை மாலைகள் 
எத்தனை மணித்துகள்கள் 
எங்களின் எச்சில் பட்ட 
தித்திக்கும் திகட்டாத 
மறைந்தும் மறையாத பொழுதுகள் 


அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில் 
முதலில் இடம் பிடிப்பது நான் 


வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன் 
அவள் 


எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில் 
எண்ணெய்ப் பசையுமாக  


ஆவல்கள் அவளை நோக்கும் 
ஆசைகள் அசைபோடும் 
அனுபவங்கள் அப்படியே நிற்கும் 
அசையாமல் 


ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில் 
வடிந்த கண்ணீர் தடங்கள்


அதே வார்த்தை 
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது 

காதல் உணர்வுகளில் 
மனம் தொலைத்த நான் 
அங்கே மூச்சற்று


ஒட்டியிருந்த சொறி மணலை 
உள்ளங்கையிலிருந்து 
தட்டிவிட்டாள் 
உதிர்ந்தது போக
கொஞ்சம் 
புடவையில் தேய்த்து 
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..


மணலில் ஒட்டிய படியே 
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும் 
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில் 

மனம் முழுக்க வெறுமையோடு...


அவள் வருமுன் 
மனசு சொல்லிவிடும் 
திரும்பிப் பார்த்தேன் 


அங்கே அவள் 


அருகில் காதலை மறந்த 
நான் கணவனாய் 
இடையில் 
குழந்தைகள் 


மெல்ல எழுந்தேன் 
சூரியன்கள் சந்திரன்கள் 
தொடாமல்
கையில் பொத்திய  
என் காதலோடு 
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான் 
கரையில் அவளிடம்
தொலைத்ததும் 


என்னைத்தான் 




அதே காலை மாலைப் பொழுதுகள் 
சூரியப் பிரகாசங்களும் 
சந்திர நிழல்களும்...


நல்லதும் கெட்டதுமான 
கடிகார முள்ளின் 
கவனமான ஓட்டம் 


வாங்கித் 
தோற்றவை கொஞ்சம்
விற்றுத் 
தொலைத்தது நிறைய...


இதோ 
இந்தக் கடற்கரையின்
சொரிமாணலில் பாதம் பதித்து 
பையப்பைய என் பக்கத்தில் 


மனதில் நினைக்கும் போதே 
மகிழ்ச்சியை மலர்த்தும் அவள் 


எத்தனை மாலைகள் 
எத்தனை மணித்துகள்கள் 
எங்களின் எச்சில் பட்ட 
தித்திக்கும் திகட்டாத 
மறைந்தும் மறையாத பொழுதுகள் 


அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில் 
முதலில் இடம் பிடிப்பது நான் 


வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன் 
அவள் 


எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில் 
எண்ணெய்ப் பசையுமாக  


ஆவல்கள் அவளை நோக்கும் 
ஆசைகள் அசைபோடும் 
அனுபவங்கள் அப்படியே நிற்கும் 
அசையாமல் 


ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில் 
வடிந்த கண்ணீர் தடங்கள்


அதே வார்த்தை 
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது 

காதல் உணர்வுகளில் 
மனம் தொலைத்த நான் 
அங்கே மூச்சற்று


ஒட்டியிருந்த சொறி மணலை 
உள்ளங்கையிலிருந்து 
தட்டிவிட்டாள் 
உதிர்ந்தது போக
கொஞ்சம் 
புடவையில் தேய்த்து 
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..


மணலில் ஒட்டிய படியே 
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும் 
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில் 

மனம் முழுக்க வெறுமையோடு...


அவள் வருமுன் 
மனசு சொல்லிவிடும் 
திரும்பிப் பார்த்தேன் 


அங்கே அவள் 


அருகில் காதலை மறந்த 
நான் கணவனாய் 
இடையில் 
குழந்தைகள் 


மெல்ல எழுந்தேன் 
சூரியன்கள் சந்திரன்கள் 
தொடாமல்
கையில் பொத்திய  
என் காதலோடு 
நழுவி நழுவிப் போகிறேன்..


காதலனாய் நான் 
கரையில் அவளிடம்
தொலைத்ததும் 


என்னைத்தான் 

3 கருத்துகள்:

  1. நன்றி செய்தாலி உங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு...

    பதிலளிநீக்கு
  2. ஏக்கங்கள் நிறம்பிய காதல் வரிகள் அருமையாகவும் பீலிங்காவும் இருந்தது சார் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...