கருத்த மேகங்கள் நீர்ச்சூல்
சுமந்து அலைவது போல
நானும் உறவுகளை
என்மனதில் எப்போதும் ....
அவை பொழியுமா
நனைக்குமா கொட்டுமா
அல்லது
பனிக்கட்டிகளோடு குட்டுமா
இப்படித்தான் ஒருநாள்
என் வீட்டின் முற்றத்தில்
நான் வளர்க்கும் ரோஜாவின் அருகில்
இறைந்து இறைத்துப் பேசியது
என் உறவு ஒன்று...
இறுதியில் மனசு விட்டு அழுது
வாட்டத்துடன் பிரிந்தது...
மழையின் வரவில் மலர்ந்த ரோஜா
அதன் முகத்தை வாஞ்சையுடன்....
பனிக்கட்டியும் பேரிறைச்சலுமாய்
வந்தது மழை...
மறுநாள் ரோஜா வாடி வதங்கிக்
கிடையாய் கிழே....
என் மனசு போல ...
எனக்குப் பூக்கள் எப்போதும்
மலர்ச்சியாய் இருக்க வேண்டும்.
அவற்றை மலர்த்திட மழை வேண்டும்
சாறலாக சீலை நனையும் அளவுக்குப்
போதுமே...
அந்த மேகம் தரும் மழை....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக