குளிர் ஊடுருவும் முன்பனிக்காலம்
ஓர் உயிர் உருகிய
கூடலின் பிந்திய புழுக்கத்தில்
கசகசத்த வியர்வை ஒட்டிய
காது மடலின் கீழ் என் கேசத்தில்
சுடும் அவனது மூச்சுக் காற்று
என்னையும் என்ரகசியங்களையும்
என்னோடு தவிக்க விட்டு
உறவுற்ற உஷ்ணம் உள்ளடக்கி
உடற்கூடு ஒடுங்கிக் கிடக்கையில்
அருகினில் என்னில் மூழ்கி
தொலைவினில் புள்ளியாக என்னைத்
தொட்டவாறு நித்திரைக்கும்
என் வாழ்வாகிப்போன அவன்
அவனை விலக்கியும்
பின் விலகியும்...
இமை மூடிய அவனது விழிகளை
உற்று நோக்கினேன்....
ஒன்றுமறியாத இவனுக்கு தெரியாது
என் பெயரைத் தன் மகளுக்கு இட்டு
என்னை நினைத்து
வேறோருத்தியுடன் வாழும்
என் கடந்தகால உறவைப் பற்றி...
சே....என்ன வாழ்விது...
அடுத்தவன் சட்டையை
போட்டு அழகு காட்டும்
அற்பத்தனமான வாழ்க்கை...
கடைக்கண்ணில் ஈரம்
அனிச்சையாய் கைதுடைக்க
உறங்கிப் போனேன்
வழக்கம்போல...
வரிகளின் சிறப்பு கருவோடு கொள்ளும் உறவு.
பதிலளிநீக்குரகசிங்கள் பேசினால் ...
தொல்லைகள் தானே .