15th - ஜுன்
சூனியமான நான் கருவறைக்குள் புகுந்தேன்..17th ஜுன்
வயிற்றுக்குள் உயிர்பெற்று வளரும் ஒரு உயிர் திசு ...
30 ஜுன்
என் அருமைத் தாய் என் தந்தையிடம் வெட்கம் தின்ன வெல்லமென மெல்லச் சொன்னாள்...
"நீங்கள் அப்பா ஆகப் போகிறீர்கள"
மகிழ்ச்சிக்கடலில் எந்தையும் தாயும் நீந்தி திளைத்தனர் ...
15th செப்டம்பர் :-
என் இதயத் துடிப்பை நானே உணரும் தருணம்... இது எத்தனை மகிழ்ச்சி...
14அக்டோபர் :
செப்பு போன்ற குட்டிக் குட்டிக் கால்கள் கைகளும் வயிறும் தலை என அத்தனையும் தளிர்களாக பஞ்சுப் பாதங்களுடன் இன்னும் முடியவில்லை...
13நவம்பர்:
என் தாயை இன்று ஸ்கேன் செய்யும் படி மருத்துவர் சொல்ல ....
வாவ் ... நான் உங்களில் ஒரு அழகுப் பெண்....
14நவம்பர்.
நான் சாகடிக்கப்பட்டேன்....
என் அன்புத் தந்தையும் தாயுமே என்னைக் கொன்றனர்...
ஏன்
ஏன்???
நான் ஒரு பெண் குழந்தை என்பதால்
கொள்ளைப் பாசத்திற்குத் தாய் வேண்டும்
கூடிக குலாவத் தாரம் வேண்டும் - ஏன்
கூத்தடிக்க கேள் பிரண்டு என
அத்தனையும் பெண்ணாய் வேண்டும்
ஆனால்
மகள் மட்டும் ????
ஏன்
ஏன்
சீ... மனிதம் தெரியாத மானிடக் கொல்லி....
என் கண்கள் என் கண்ணீரை ....
பதிலளிநீக்குமௌனமாக ..........
வெளிபபடுத்திதியது.....
Abdullah .சார் . மிகவும் கனமான பதிவு .
என் கண்கள் என் கண்ணீரை ....
பதிலளிநீக்குமௌனமாக ..........
வெளிபபடுத்திதியது.....
Abdullah .சார் . மிகவும் கனமான பதிவு .
அன்பு ஞானம்
பதிலளிநீக்குதங்களின் மேலான வருகைக்கும் மனம் திறந்து பாராட்டும் இந்த நற்பண்புக்கும் நான் உங்களின் விசிறி...உங்களின் தளம் வந்து நுகர்ந்து கொண்டுதான் இருக்கிறேன்..எவ்வளவு பெரிய ஆளு நீங்க உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் என் அன்பும் மகிழ்ச்சியும்...
உண்மையிலேயே வேதனை தரக்கூடிய விஷயம் இந்த பெண் சிசுகொலை.............ஆனால் உங்களுக்கு தெரியுமா................எனக்கு பெண் குழந்தைதான் வேண்டும் என்று இறைவனிடம் எனது ஐய்ந்து வேலை தொழுகையிலும் வேண்டினேன் அவன் என்னை கைவிடவில்லை............இப்பொழுது எனது பெண் குழந்தைக்கு வயது ஒன்று...................மாஷா அல்லா.............
பதிலளிநீக்குதந்தையான நீங்கள் தாயுமானவர்... இறுதி நாளில் அந்த நாயன் கேட்கும் அமானிதப் பொருட்கள் பற்றிய கணக்கில் நமக்கு அவன் அளித்த அன்பு மழலைகளைப் பற்றியும் கேட்பான்..உங்களின் வருகைக்கும் அன்பான கருத்து இடுகைக்கும் மனம் நிறைந்த நன்றிகள்....
பதிலளிநீக்குசட்டை எடுத்து அடிக்கும் வரிகள் .
பதிலளிநீக்குஇன்னும் இப்படியே ....
திருந்துமா ?
தொடருங்கள் உங்கள் சமூகக் கவிதைகளை .