சனி, அக்டோபர் 29, 2011

ஊஞ்சல் - அப்துல்லாஹ்





மனம் கிறங்குகிறது 
மலையின் முகடு தொட்டுப்பின் 
அங்கேயே தொடங்கி 
மிண்டும் தரையை நோக்கி...
தேடுதலின் ஓட்டம...

மீள்தலும் முடித்தலும் 
மீள்தலோடு மீண்டும் மீண்டும் 
முகடும் தரையுமாய் 
முடிவதும் மீள்வதுமாய்
காலத்தையும் என் கனவையும் 
உள்ளடிக்கிய பயணம்


பயணத்தின் போது
களைப்பும் அலுப்பும் 
வருவதே இல்லை 
அலற முடியாத 
அடிவாங்குதலும் 
அவமானம் உணராத 
உயிர் தொடும் வலிகளும்
இருளோடு பேசி
இருப்பை உணர்ந்து 
இழிவு தவிர்க்க 
இரவு பகல் வேறுபாடு களைந்து 
ஈட்டிடும் பொருளே
பயணத்தின் பிரதானமாக...


கைகட்டி நின்றுவிவிடாமல்.....
காலம் என்னைக் கடந்து விடாமல் 
கனவுகள் என்னோடு சிதைந்து 
அவற்றின் முகங்கள் விகாரமாகி 
என்னை அச்சுறுத்தி விடாமல் ...
கைப்பொருள் குப்பி காலியாகி 
கூடிய என் உறவுகளுக்கு 
நான் கேலியாக விடாமல்..... 


பொழுதுகளைச் சுமந்து 
விடியலில் தரை தொடங்கி 
பொன் அந்தியில் முகடு தொட்டு 
மறுபடியும் விடியலாய் விரியும் 
சூரிய உஞ்சலின் தொங்கு நாளத்தில் 
என் சூடான மூச்சுக் காற்றின் 
ஸ்பரிசம் பட்டும் பற்றியும் 
அதனை ஆட்டிக் கொண்டும்
அதனுடன் ஓடிக கொண்டும்...
ஐயகோ ....


ஊஞ்சல் வாழ்க்கையில் 
உறவுகளை சுமந்துகொண்டு 
முகட்டிலும் இல்லாமல் 
தரையிலும் நில்லாமல் 
தடங்கல் நிகழாமல் 
தாலிக் கொடியென்னும்
தொங்கு நாளத்தில் 
தொடர்கிறது 
என் சாய்ந்தாட்டம் 
புரி முறியாத வரை......






மனம் கிறங்குகிறது 
மலையின் முகடு தொட்டுப்பின் 
அங்கேயே தொடங்கி 
மிண்டும் தரையை நோக்கி...
தேடுதலின் ஓட்டம...

மீள்தலும் முடித்தலும் 
மீள்தலோடு மீண்டும் மீண்டும் 
முகடும் தரையுமாய் 
முடிவதும் மீள்வதுமாய்
காலத்தையும் என் கனவையும் 
உள்ளடிக்கிய பயணம்


பயணத்தின் போது
களைப்பும் அலுப்பும் 
வருவதே இல்லை 
அலற முடியாத 
அடிவாங்குதலும் 
அவமானம் உணராத 
உயிர் தொடும் வலிகளும்
இருளோடு பேசி
இருப்பை உணர்ந்து 
இழிவு தவிர்க்க 
இரவு பகல் வேறுபாடு களைந்து 
ஈட்டிடும் பொருளே
பயணத்தின் பிரதானமாக...


கைகட்டி நின்றுவிவிடாமல்.....
காலம் என்னைக் கடந்து விடாமல் 
கனவுகள் என்னோடு சிதைந்து 
அவற்றின் முகங்கள் விகாரமாகி 
என்னை அச்சுறுத்தி விடாமல் ...
கைப்பொருள் குப்பி காலியாகி 
கூடிய என் உறவுகளுக்கு 
நான் கேலியாக விடாமல்..... 


பொழுதுகளைச் சுமந்து 
விடியலில் தரை தொடங்கி 
பொன் அந்தியில் முகடு தொட்டு 
மறுபடியும் விடியலாய் விரியும் 
சூரிய உஞ்சலின் தொங்கு நாளத்தில் 
என் சூடான மூச்சுக் காற்றின் 
ஸ்பரிசம் பட்டும் பற்றியும் 
அதனை ஆட்டிக் கொண்டும்
அதனுடன் ஓடிக கொண்டும்...
ஐயகோ ....


ஊஞ்சல் வாழ்க்கையில் 
உறவுகளை சுமந்துகொண்டு 
முகட்டிலும் இல்லாமல் 
தரையிலும் நில்லாமல் 
தடங்கல் நிகழாமல் 
தாலிக் கொடியென்னும்
தொங்கு நாளத்தில் 
தொடர்கிறது 
என் சாய்ந்தாட்டம் 
புரி முறியாத வரை......


1 கருத்து:

  1. இயற்றும்
    எழுத்தின்
    வடிவழகு
    நடையழகு
    சொல்லழகிலும்
    ஒளிரிகிறது கவியின்
    கவியழகு

    கவிப் பெருந்தொகைக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...