பெண்ணடிமை....
பெண்சுதந்திரம்....
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிய
விந்தை மனிதர்களை சாடி
கவிஞனின் அறைகூவல்...
அடிமை விலங்கொடித்து
வா வெளியே! மாதர் சங்கங்கள்..
ஆணுக்குப் பெண்
சரிநிகர் சமானமே
இனி அடிமைப்படுத்த
விட மாட்டோம்
நாங்கள் விழித்துக் கொண்டோம்.
ஆங்காங்கே பேரணிகள்...
ஆமாம் இவர்களெல்லாம்
யாருக்கு அடிமைகள்...
ஐயாயிரம் ரூபாய்க்கும் மேல்
அகலச் சரிகைப் பட்டு
ஆடைகளும்
ஓடி ஓடி வாங்கிக் குவிக்கும்
ஒப்பனைப் பொருட்களென்று
மைகளும் மஸ்காராக்களும்
மலை போல விலைஉயர்ந்தும்
மயங்கியே வாங்கி அணியும்
மாசற்ற பொன்னும் மணியும்
மதிமறந்து உறவாய்ச் சேர்த்த
தொலைகாட்சியும்
தொடர்காட்சிகளும்
உலகோ டுனை அடிமையாக்கி
விலங்கிட்டு வீழ்த்த
வேட்டைக்கு இலக்கான நீயோ...
தாயாகவும் தாரமாகவும்
தமக்கையாகவும் தன் மகளாகவும்
உன் அன்புக்கும் காதலுக்கும்
பாசத்துக்கும் அடிமைப்பட்ட
ஆடவர் எம்மிடம்
விடுதலை கேட்டு
வீதிக்கு வருகிறாய்...
அடிமை விலங்கொடித்து
வா வெளியே!
ஆடவரும் கேட்கின்றோம்
விலங்கொடித்து வருவாயா....
வீதிக்கு நம் குடும்பம்
வரு முன்னர் தடுப்பாயா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக