திங்கள், ஜூன் 13, 2011

கண்ணீர்க் கறை by அப்துல்லாஹ்

மறைந்தும் மறையாத மஞ்சள் சூரியனாய் நீ 
உன் முகம் உள்வாங்கிய ஓயாத அலைகடலாய் நான் 
வெளித்தள்ளும் சிப்பிகளாய் வேகாத உன் நினைவுகள் 
மாலையும் இரவும் மயங்கிடும் கணத்தில் உன்னுடன் 
சிணுங்கி கிறங்கி பின் இணங்கிக் களைப்புடன் காதலானேன் 
மாலைகளின் மங்கியஒளியில் கறைபடிந்த காதலாய் நான்மட்டும் 
கூதர்க் காற்றின் குளிராய் நடுக்குகிறது உன் வெறுமை 
நடுக்கடலின் அரவமில்லாத நடுநிசியாய் என் உள்ளம் 
கடலாடி முத்துக்குளித்து கரை சேர்க்கும் பொருள் போல்
உடலாடி உட்புகுந்து உறவாடியவனே 
உப்புக்கரிக்குமென் கண்ணீரைக் கரை சேர்ப்பாயா
கனவுப் புகைக் கூண்டில் கையறுநிலையில் நான்
திசைஏதும் அறியாமல் உள்ளுக்குள் முடங்குகிறேன் 
அடங்கி ஒடுங்கி உன் வரவுக்காய் வாசல் நோக்கி
அழுதழுது ஓய்வதன்றி வேறேதும் அறிகிலேனே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...