புதன், செப்டம்பர் 07, 2011

நெய்தல் பாலையான கதை...







அங்கங்களில் பாய்ந்தோடும் செங்குருதி 
தங்கி உறைந்து நான் சடலமாகும்முன்
பொங்கிப் பீறிட்டழும் என் மனக்கடலின்
தூங்க ஒட்டாத துயர நிகழ்வுகள்

அரபுக்கடலின் அலைகளில் எந்தன் 
உறவுக் கடலைத் தொலைத்ததை சொன்னால்
இரவில் உறையும் அந்தக்கடலும் 
இறந்தே மறையும் இனிஎழும்பாது 

கடல் கடந்த வாழ்க்கையில்
காற்று வழிப் பயணத்தில் 
கால்தடம் பதித்தேன் இந்த 
கவின்மிகு அரேபியாவில் 

எட்டுமணி நேரம் இடைவெளியின்றி 
ஏசி பெட்டிகளை தோளில்  சுமந்து 
ஏணிப்படிகளில் எளிதாகக் கடத்த 
ஏறி இறங்கும் ஏழை இந்தியன்

கையில் கிடைக்கும் சொற்பக் காசும் 
கடனையடைக்கவும் காலங்கழிக்கவும் என் 
கண்மணிக் குழந்தைகள் கல்விக்காகவும்  
கருதியே நானும் களிப்புடன் கழிப்பேன்

கழித்திட்ட ஆண்டுகள் கணக்கிட வேண்டின் 
கைவிரல் எண்ணிக்கை காணாது போகும் 
களைப்புடன் நானும் பணி நீங்கி வருகையில் 
அழைத்துப் பேசுவேன் அலையில் உறவுகளை 

பெற்றவளின் மரணமும் தந்தையின் நலிவும்
பிள்ளைகளின் உடுப்பும் பள்ளிகளின் பீசும்
விலைவாசி உயர்வும் வீட்டுச்செலவும் 
வேறென்ன இவைதான் எனக் கன்றாடம்

பிணக்குகள் தோன்றும் காசுதான் காரணம்
பின்னர் சரியாவதற்கும் காசுதான் காரணம் 
தனக்கென எதுவுமின்றி கணக்குகள் பார்த்தால் 
கையில் இருப்பு என் நோயுற்ற உடலம் 

நல்லறமாகவே நடக்குதென் இல்லறம் 
நாடு கடந்தும் நாட்டங்கள் என்னுடன் 
அல்லும் பகலும் உறவுகளின் நினைப்பில்
அலைவழி தானே அன்பின் பரிமாற்றம்...






அங்கங்களில் பாய்ந்தோடும் செங்குருதி 
தங்கி உறைந்து நான் சடலமாகும்முன்
பொங்கிப் பீறிட்டழும் என் மனக்கடலின்
தூங்க ஒட்டாத துயர நிகழ்வுகள்

அரபுக்கடலின் அலைகளில் எந்தன் 
உறவுக் கடலைத் தொலைத்ததை சொன்னால்
இரவில் உறையும் அந்தக்கடலும் 
இறந்தே மறையும் இனிஎழும்பாது 

கடல் கடந்த வாழ்க்கையில்
காற்று வழிப் பயணத்தில் 
கால்தடம் பதித்தேன் இந்த 
கவின்மிகு அரேபியாவில் 

எட்டுமணி நேரம் இடைவெளியின்றி 
ஏசி பெட்டிகளை தோளில்  சுமந்து 
ஏணிப்படிகளில் எளிதாகக் கடத்த 
ஏறி இறங்கும் ஏழை இந்தியன்

கையில் கிடைக்கும் சொற்பக் காசும் 
கடனையடைக்கவும் காலங்கழிக்கவும் என் 
கண்மணிக் குழந்தைகள் கல்விக்காகவும்  
கருதியே நானும் களிப்புடன் கழிப்பேன்

கழித்திட்ட ஆண்டுகள் கணக்கிட வேண்டின் 
கைவிரல் எண்ணிக்கை காணாது போகும் 
களைப்புடன் நானும் பணி நீங்கி வருகையில் 
அழைத்துப் பேசுவேன் அலையில் உறவுகளை 

பெற்றவளின் மரணமும் தந்தையின் நலிவும்
பிள்ளைகளின் உடுப்பும் பள்ளிகளின் பீசும்
விலைவாசி உயர்வும் வீட்டுச்செலவும் 
வேறென்ன இவைதான் எனக் கன்றாடம்

பிணக்குகள் தோன்றும் காசுதான் காரணம்
பின்னர் சரியாவதற்கும் காசுதான் காரணம் 
தனக்கென எதுவுமின்றி கணக்குகள் பார்த்தால் 
கையில் இருப்பு என் நோயுற்ற உடலம் 

நல்லறமாகவே நடக்குதென் இல்லறம் 
நாடு கடந்தும் நாட்டங்கள் என்னுடன் 
அல்லும் பகலும் உறவுகளின் நினைப்பில்
அலைவழி தானே அன்பின் பரிமாற்றம்...

1 கருத்து:

  1. பணத்தேவைக்காக வெளிநாட்டில் வேலைக்காக ஓடும் நடுத்தர குடும்ப மக்களின் நிலையை வெகு அருமையாக எடுத்து சொல்லி இருக்கீங்க அப்துல்லாஹ் சார்....

    அவசியத்துக்காக தான் குடும்பத்தை பாசத்தை அன்பை காதலை உறவுகளை விட்டு இத்தனை தூரம் ஓடுவது...

    இத்தனை தூரத்தில் வேலைக்கு போறவங்க எந்த நிலையில் எப்படி நாட்களை நகர்த்துறாங்கன்னு கூட ஊரில் இருப்போருக்கு தெரியாது....

    ஊரில் எப்படி எல்லாமே காடு கழனி நிலம் விற்று நகைவிற்று மனைவியின் கண்ணீர் தாய் தந்தை கண்ணீர் பிள்ளைகளின் பாசம் எல்லாமே மனதில் தேக்கி வைத்துக்கொண்டு இங்கே இந்த பாலைவனத்தில் வெயில் மழை பார்க்காம உழைத்து காசு சேமித்து ஊருக்கு அனுப்பி வைப்பார்கள்...

    அந்த ரூபாத்தாளை முகர்ந்தால் ஒருவேளை இவர்கள் உழைப்பின் வியர்வையும் கனவின் தேக்கமும் கண்ணீர் கறையும் தெரிய வரலாம்....

    ஒன்னு வேணுன்னா மற்றதை இழக்கவேண்டும்.... குடும்பம் நல்லா இருக்கணும்னா குடும்பத்தலைவன் தன்னை பலியாக்கணும்.. தன் சந்தோஷத்தை தன் காதலை தன் அன்பை எல்லாமே ஒரு துளி கண்ணீரில் மறைத்துக்கொண்டு உழைப்பார்கள் வெளிநாட்டில்....

    ஏழைத்தொழிலாளர்களை சுட்டெரிக்கும் வெயிலில் ரோட்டில் வேலை செய்யும்போது பார்க்க எனக்கு கஷ்டமாக இருக்கும்....

    அடிக்கும் மண் காற்றில் தான் மறைந்தாலும் தன் காசு தன் குடும்பத்தை காக்கும் நிம்மதி அவர்கள் உள்ளத்தில்....

    அம்மாவோ அப்பாவோ பாசத்தை மனதில் வைத்துக்கொண்டு மகன் வருவானா என்ற எதிர்ப்பார்ப்பை கண்களில் தேக்கிக்கொண்டு இறுதி மூச்சை இழுத்துப்பிடித்துவைத்திருப்பார்கள் மகன் வந்துவிடுவான் அவன் மடியில் உயிர் விடலாம் என்ற நம்பிக்கையில்....

    ஆனால் இங்கே இருக்கும் நிலை அதை விட கொடுமை... லீவ் கேட்டா அத்தனை ஈசியா கிடைத்துவிடாது....

    பணம் ஊருக்கு அனுப்ப வரும் இந்தியர்களின் கண்களில் ஒரு நிரந்தர சோகம் நான் கண்டதுண்டு....

    ஒவ்வொருவருக்கு ஒரு சோகக்கதை இருக்கும்.... கண்களில் ஏக்கம் தெரியும்....

    உழைத்து உடல் சோர்ந்து மனம் மரத்து அன்புக்காக தேடி ஊரில் போய் இருக்கலாம் என்று முனைந்தால் இருக்கவா போய் சேரமுடிகிறது? இறக்கத்தான் முடிகிறது... நோய்களை பரிசாக பெற்றுக்கொண்டு ஆரோக்கியம் இழந்து அன்பை மட்டுமே தேடி தன் மனைவியின் மடி தேடி ஓய்ந்துவிடுகிறது....

    அதுவும் வீட்டு வேலை செய்யும் பெண்கள் வருவது அதிகமாக உடலில் காயத்துடன் மனதில் வேதனையுடன் தப்பிக்கவும் வழி இல்லாது யாராவது கிடைப்பார்களா தன் உடல் காயத்துக்கும் மன வேதனைக்கும் மருந்திடுவார்களா என்று வரும்போது அவர்களிடம் பேசும்போதே என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியாம போயிடும்....

    உங்க கவிதையின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா அப்துல்லாஹ் சார்?

    ஒரு மனிதனின் மன உணர்வுகளை படிக்கும்போதே மனம் கரையும்படி வரிகள் அமைப்பது தான்....

    ஒருத்தரின் வாழ்வில் துன்பம் வந்திருக்குன்னு படிக்கும்போதே என்னவோ நம் குடும்பத்தில் யாரோ இப்படி சிரம்ப்படுகிறார் என்பது போல உணர செய்துவிடும் உங்க வரிகள்... இது தான் சிறப்பு அப்துல்லாஹ் சார் உங்க படைப்புகளில்...

    இந்த கவிதை படிக்கும் ஒவ்வொருவரும் தன் நிலையை நினைத்து பார்க்காமல் போகமாட்டாங்க கண்டிப்பா.. உங்க கவிதையின் வெற்றியே இது தான்பா...

    முடிந்தால் மலையாளப்படம் gaddhammaa பாருங்க... அழுதுருவீங்க... அத்தனை வேதனை... காவ்யா மாதவன் நடித்தது....

    இந்த படம் பார்ப்போர் கண்டிப்பா வெளியூர்ல வேலைக்கு போக இஷ்டப்படமாட்டாங்க....

    அன்பு வாழ்த்துகள் அப்துல்லாஹ் சார்...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...