ஞாயிறு, அக்டோபர் 02, 2011

ஒரு ஓரத்தில் தானே...அப்துல்லாஹ்





எல்லாவிதமான 
என் இளவயதின் 
ஒடுங்கிய நினைவுகளும் 
பொருட்களாக சாட்சிகளாக 
உண்மையாக 
என்னிடமே உள்ளன


அவற்றில் சில 
விளையாட்டுப் பொருட்களாக 
காட்சிப் படங்களாக 
என் வாசிப்பில் கற்பிழந்த 
புத்தகங்களாக 
நான் பயன்படுத்தி 
கிழித்த கழிந்த 
உடுப்புகளாக 
காலத்தைப் போர்த்திய 
நினைவுகளாகவும் ...


ஆயினும் 
என் கையில் இருக்கும் 
உச்சியில் சில்லு தெறித்த 
இந்தப் பம்பரம் எனக்கு உயிரானது 
உம்மா சொல்லுவாள்

என்னால் எவ்வளவு காலம் 
ரணப் படுத்தப்பட்டவள்
என் உம்மா அந்த பம்பரத்தை மட்டும் 
யாரையும் தொட விட மாட்டாள் 


நான் அந்தப் பம்பரத்தை 
அதிகம் நேசித்தேன் 
வகுப்பறையில் 
மாமா வீட்டில் 
படுக்கையில் 
பஸ்சில் ஏறி உம்மாவுடன் 
தென்காசிக்கு பயணிக்கையில் 
பள்ளிவாசலில் 
தினமும் குளிக்க செல்லும் 
குளத்தின் படித்துறையில் 
என எல்லா இடத்திலும்...


என்னுடையதில் என்னுடையதாக
அரைக்கால்சட்டையின் பையில்
எப்போதும் கூடவே இருந்த 
அந்தப் பம்பரத்தை...


இத்தனை ஆண்டுகளாக 
இருந்ததே தெரியாமல் 
மறந்தே போனேன் 
என்னை விட்டுப் பிரிந்த 
என் அன்புத் தாயைப்போல 
அவளது வஞ்சையின் 
வாடாத மணத்தைப் போல்


ஆனாலும் என் கூடவே
இருக்கிறது 
இருக்கட்டுமே...
ஒரு ஓரத்தில் தானே 




எல்லாவிதமான 
என் இளவயதின் 
ஒடுங்கிய நினைவுகளும் 
பொருட்களாக சாட்சிகளாக 
உண்மையாக 
என்னிடமே உள்ளன


அவற்றில் சில 
விளையாட்டுப் பொருட்களாக 
காட்சிப் படங்களாக 
என் வாசிப்பில் கற்பிழந்த 
புத்தகங்களாக 
நான் பயன்படுத்தி 
கிழித்த கழிந்த 
உடுப்புகளாக 
காலத்தைப் போர்த்திய 
நினைவுகளாகவும் ...


ஆயினும் 
என் கையில் இருக்கும் 
உச்சியில் சில்லு தெறித்த 
இந்தப் பம்பரம் எனக்கு உயிரானது 
உம்மா சொல்லுவாள்

என்னால் எவ்வளவு காலம் 
ரணப் படுத்தப்பட்டவள்
என் உம்மா அந்த பம்பரத்தை மட்டும் 
யாரையும் தொட விட மாட்டாள் 


நான் அந்தப் பம்பரத்தை 
அதிகம் நேசித்தேன் 
வகுப்பறையில் 
மாமா வீட்டில் 
படுக்கையில் 
பஸ்சில் ஏறி உம்மாவுடன் 
தென்காசிக்கு பயணிக்கையில் 
பள்ளிவாசலில் 
தினமும் குளிக்க செல்லும் 
குளத்தின் படித்துறையில் 
என எல்லா இடத்திலும்...


என்னுடையதில் என்னுடையதாக
அரைக்கால்சட்டையின் பையில்
எப்போதும் கூடவே இருந்த 
அந்தப் பம்பரத்தை...


இத்தனை ஆண்டுகளாக 
இருந்ததே தெரியாமல் 
மறந்தே போனேன் 
என்னை விட்டுப் பிரிந்த 
என் அன்புத் தாயைப்போல 
அவளது வஞ்சையின் 
வாடாத மணத்தைப் போல்


ஆனாலும் என் கூடவே
இருக்கிறது 
இருக்கட்டுமே...
ஒரு ஓரத்தில் தானே 

2 கருத்துகள்:

  1. உயிர்த் எழுந்த
    நினைவலை வரிகளில்
    தாயின் பாசமும்
    பம்பரக் காதலும்

    மண்வாசனை கவிதை மிகம அருமை கவிஞரே

    பதிலளிநீக்கு
  2. சில பல வார்த்தைகளில்
    சிறகுகள் கோர்த்து விட்டு
    சிந்தையைச் சிதறடிக்கச்
    செய்யும் செய்தாலி
    உங்களின் அன்பான வரிகள்
    என் தெம்பான பயணத்திற்கு

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...