திங்கள், பிப்ரவரி 06, 2012

நில்லாது பறத்தல்


நிசப்தமான நடுப்பகலில்
நீலவானத்தின் தவநிலை கீறி
தடம் பதிந்தும் பதியாமலும்
தன் மெல்லிய சிறகடித்தலில்
மிதந்து பறந்தது சின்னக்குருவி
அதற்கென சில நோக்கங்கள்
இரையை தேடி மட்டுமே ....

பிரிதலின்பால் சிறகடிப்பு பொதுவானது
பரப்பைக் கடக்கும் அவை
நோக்கமொன்றைக் கைகொண்டு
தன் கூட்டை மறந்து
தவிக்கும் குஞ்சுகளைப் பிரிந்து
விரைகின்றன இரைதேடி....

சிறகடிப்பில் தூரம் கணக்கல்ல
சிதறிக் கிடக்கும் உறவுகள்
சின்ன இடைவெளிக்குப் பிறகு
திரும்பிய பறவையின்
அடைதலின் தருணத்தில் அங்கு
அணையுடைத்து  மகிழ்ச்சி வெள்ளம்
அது...
கூடு சேர்ந்த பறவையைக் கண்டா
கொண்டு சேர்த்த இரையைக் கண்டா....

மகிழ்ச்சி அடுத்த சிறகடிப்பு வரை மட்டுமே....

முடிவற்ற பறத்தலும்
முற்றுப்பெறா தேடலும்
வானின் நிற மாற்றத்துடன்....

அடிவான் சிவக்க
சிறகடிப்பைத் தொடங்கி 
நீலத்துடன் நில்லாது தேடி
அஸ்தமிக்கையில்  அடைகின்றன
ரத்தம் சிந்திய பாறையிடுக்கில்
நுழையும் அந்த சூரியனைப் போல்..

என் சிறகடிப்பில் வைகறையுடன் தொடங்கி
வழியில் இரைதேடலில் தான் இன்னும்
என் கூட்டடைதல்
அது என்னுடன் பத்திரமாய் வைத்திருக்கிறேன்
அது நிகழ்கையில்
அணையுடைத்து  மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரளும்
அந்த மகிழ்ச்சி...

கூடு சேர்ந்த பறவையைக் கண்டா
கொண்டு சேர்த்த இரையைக் கண்டா..

நானும் பறவையும் ஒன்று தான்...




நிசப்தமான நடுப்பகலில்
நீலவானத்தின் தவநிலை கீறி
தடம் பதிந்தும் பதியாமலும்
தன் மெல்லிய சிறகடித்தலில்
மிதந்து பறந்தது சின்னக்குருவி
அதற்கென சில நோக்கங்கள்
இரையை தேடி மட்டுமே ....

பிரிதலின்பால் சிறகடிப்பு பொதுவானது
பரப்பைக் கடக்கும் அவை
நோக்கமொன்றைக் கைகொண்டு
தன் கூட்டை மறந்து
தவிக்கும் குஞ்சுகளைப் பிரிந்து
விரைகின்றன இரைதேடி....

சிறகடிப்பில் தூரம் கணக்கல்ல
சிதறிக் கிடக்கும் உறவுகள்
சின்ன இடைவெளிக்குப் பிறகு
திரும்பிய பறவையின்
அடைதலின் தருணத்தில் அங்கு
அணையுடைத்து  மகிழ்ச்சி வெள்ளம்
அது...
கூடு சேர்ந்த பறவையைக் கண்டா
கொண்டு சேர்த்த இரையைக் கண்டா....

மகிழ்ச்சி அடுத்த சிறகடிப்பு வரை மட்டுமே....

முடிவற்ற பறத்தலும்
முற்றுப்பெறா தேடலும்
வானின் நிற மாற்றத்துடன்....

அடிவான் சிவக்க
சிறகடிப்பைத் தொடங்கி 
நீலத்துடன் நில்லாது தேடி
அஸ்தமிக்கையில்  அடைகின்றன
ரத்தம் சிந்திய பாறையிடுக்கில்
நுழையும் அந்த சூரியனைப் போல்..

என் சிறகடிப்பில் வைகறையுடன் தொடங்கி
வழியில் இரைதேடலில் தான் இன்னும்
என் கூட்டடைதல்
அது என்னுடன் பத்திரமாய் வைத்திருக்கிறேன்
அது நிகழ்கையில்
அணையுடைத்து  மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரளும்
அந்த மகிழ்ச்சி...

கூடு சேர்ந்த பறவையைக் கண்டா
கொண்டு சேர்த்த இரையைக் கண்டா..

நானும் பறவையும் ஒன்று தான்...



சனி, பிப்ரவரி 04, 2012

நாட்காட்டியில் எண்கள்


சூரியனின் தோன்றலும் அடைதலுமான
மீள்நிகழ்வுகளால்
நாழிகைகளை கடத்தியவாறு
நாட்கள் அவற்றின் போக்கில் கரைகின்றன...

சிலிர்க்கவைக்கும் சில நிகழ்வுகள் மட்டும்
காலநீரோட்டத்தில் கரைதாண்டாமலே
கல்போடு தங்கி கலங்கடிக்கின்றன...

உறவுகளின் கணப்புச்சூட்டில்
உயிர் கரைந்து உள்ளம் அனாதையாய் நான்
உறங்காமல் தவித்த அந்த பொழுதுகளை
உள்ளடக்கிய நாள் ஒன்று
ஒரு கட்டத்துக்குள் எண்ணாக வடிவெடுத்து
நாட்காட்டியில்
ஏதோ ஒரு இடத்தில்
வரிசையோடு வரிசையாக....

அந்தப் பகலில் தான் அது நிகழ்ந்தது
அதனால் எத்தனை சோகம் என்னுள்
அசையாமல் அப்படியே
என் கூப்பிடலுக்கும் என் அசைத்தலுக்கும்
எந்த பதிலும் காட்டாது என் தாய்...
மல்லாந்து கட்டிலில் சலனமில்லாமல்....

வெடித்துச் சிதறும் இதய வேதனைகளை
கொஞ்சமும் அறியாது
ம்மா... ன்னு நான் கதறிய பொழுதில்
தன் கிடப்பை மாற்றாமல்.....
மரணத்தை உடுத்தி மரக்கட்டையாய்
மண்ணோடு மண்ணாய் மாறிப்போன
அந்த நாளும் அந்தப் பொழுதும்
அந்த வேதனைகளும்
ஒரு கட்டத்துக்குள் எண்ணாக வடிவெடுத்து
ஏதோ ஒரு இடத்தில் வரிசையோடு வரிசையாக....
நாட்காட்டியோடு மட்டுமே நான்.....



சூரியனின் தோன்றலும் அடைதலுமான
மீள்நிகழ்வுகளால்
நாழிகைகளை கடத்தியவாறு
நாட்கள் அவற்றின் போக்கில் கரைகின்றன...

சிலிர்க்கவைக்கும் சில நிகழ்வுகள் மட்டும்
காலநீரோட்டத்தில் கரைதாண்டாமலே
கல்போடு தங்கி கலங்கடிக்கின்றன...

உறவுகளின் கணப்புச்சூட்டில்
உயிர் கரைந்து உள்ளம் அனாதையாய் நான்
உறங்காமல் தவித்த அந்த பொழுதுகளை
உள்ளடக்கிய நாள் ஒன்று
ஒரு கட்டத்துக்குள் எண்ணாக வடிவெடுத்து
நாட்காட்டியில்
ஏதோ ஒரு இடத்தில்
வரிசையோடு வரிசையாக....

அந்தப் பகலில் தான் அது நிகழ்ந்தது
அதனால் எத்தனை சோகம் என்னுள்
அசையாமல் அப்படியே
என் கூப்பிடலுக்கும் என் அசைத்தலுக்கும்
எந்த பதிலும் காட்டாது என் தாய்...
மல்லாந்து கட்டிலில் சலனமில்லாமல்....

வெடித்துச் சிதறும் இதய வேதனைகளை
கொஞ்சமும் அறியாது
ம்மா... ன்னு நான் கதறிய பொழுதில்
தன் கிடப்பை மாற்றாமல்.....
மரணத்தை உடுத்தி மரக்கட்டையாய்
மண்ணோடு மண்ணாய் மாறிப்போன
அந்த நாளும் அந்தப் பொழுதும்
அந்த வேதனைகளும்
ஒரு கட்டத்துக்குள் எண்ணாக வடிவெடுத்து
ஏதோ ஒரு இடத்தில் வரிசையோடு வரிசையாக....
நாட்காட்டியோடு மட்டுமே நான்.....


சனி, ஜனவரி 28, 2012

மறந்து பறந்த சிட்டு.....



உண்ட களைப்புப் போக்க
உட்கார்ந்தேன் தாழ்வாரத்தில்
சட்டெனப் பறந்துவந்த
சிட்டொன்று என்னருகில்
படபடக்கும் சிறகை வெட்டி
பட்டென எழும்புவதும்
பறந்திட எண்ணமின்றி
பழையபடி அமர்ந்திடவும்
பட்டுச்சிறகோடு எனை
பார்வையில் கொஞ்சுவதுமாய்....

சிட்டதன் சிறகுக்குள்ளே
சேர்ந்த அந்த சோகம் என்ன.....

தணலாய் தகிக்கும் வெம்மை
தாகத்தைத் தீர்ப்பதற்க்கா
அலைந்தெதுவும் கிட்டிடாமல்
அன்னம் தேடி அலைகிறதோ...

அரிசி கொஞ்சம் நுள்ளி இந்த
அழகுப் பறவைக்கிடலாம்
அருந்த கொஞ்சம் நீர் மொண்டு
அருகில் கொண்டு தரலாம்....

பறவையைக் கலைத்திடாது
பயப்படுத்தி துறத்திடாது.
நழுவி நகர்ந்தேன் கொஞ்சம்
அன்னமும் தண்ணியும் பெற....

கைகளில் கொஞ்சம் அன்னம்
கிண்ணத்தில் சிறிது நீரும்
சன்னமாய் அடிமேல் அடிவைத்து
தாழ்வாரம் வந்து சேர்ந்தால்....

சிறகடித்துச் சிதறி
சுற்றியோர் வட்டமிட்டு
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....

நீர்த்தளும்பிய என்விழிக்கோளம்
ஏமாற்றம்... எதையும் அறியாத
துணைவியோ என் தோளைத் தொட்டு
இன்னும் அவளையே நெனச்சிக்கிட்டு...
இந்தப் பிறவியில் நம்மைவிட
அவந்தான் பெருசுன்னு போயிட்டா...
காலம் கூடி வரும் 
கழுத வராமலா போய்டுவா...

நான் நேசிக்கும் யாவும்
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....
நீர்த்தளும்பிய விழிக்கோளம்
காய்ந்த கோடுகளாய் 
கன்னத்துடன் ...


உண்ட களைப்புப் போக்க
உட்கார்ந்தேன் தாழ்வாரத்தில்
சட்டெனப் பறந்துவந்த
சிட்டொன்று என்னருகில்
படபடக்கும் சிறகை வெட்டி
பட்டென எழும்புவதும்
பறந்திட எண்ணமின்றி
பழையபடி அமர்ந்திடவும்
பட்டுச்சிறகோடு எனை
பார்வையில் கொஞ்சுவதுமாய்....

சிட்டதன் சிறகுக்குள்ளே
சேர்ந்த அந்த சோகம் என்ன.....

தணலாய் தகிக்கும் வெம்மை
தாகத்தைத் தீர்ப்பதற்க்கா
அலைந்தெதுவும் கிட்டிடாமல்
அன்னம் தேடி அலைகிறதோ...

அரிசி கொஞ்சம் நுள்ளி இந்த
அழகுப் பறவைக்கிடலாம்
அருந்த கொஞ்சம் நீர் மொண்டு
அருகில் கொண்டு தரலாம்....

பறவையைக் கலைத்திடாது
பயப்படுத்தி துறத்திடாது.
நழுவி நகர்ந்தேன் கொஞ்சம்
அன்னமும் தண்ணியும் பெற....

கைகளில் கொஞ்சம் அன்னம்
கிண்ணத்தில் சிறிது நீரும்
சன்னமாய் அடிமேல் அடிவைத்து
தாழ்வாரம் வந்து சேர்ந்தால்....

சிறகடித்துச் சிதறி
சுற்றியோர் வட்டமிட்டு
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....

நீர்த்தளும்பிய என்விழிக்கோளம்
ஏமாற்றம்... எதையும் அறியாத
துணைவியோ என் தோளைத் தொட்டு
இன்னும் அவளையே நெனச்சிக்கிட்டு...
இந்தப் பிறவியில் நம்மைவிட
அவந்தான் பெருசுன்னு போயிட்டா...
காலம் கூடி வரும் 
கழுத வராமலா போய்டுவா...

நான் நேசிக்கும் யாவும்
என்னிடம் சொல்லாமல்
எதையுமே கொள்ளாமல்
பறந்து பறந்து என்
பார்வை விட்டகன்று....
நீர்த்தளும்பிய விழிக்கோளம்
காய்ந்த கோடுகளாய் 
கன்னத்துடன் ...

நனைதலும காய்தலும்


நீர்ச்சொட்டுக்கள் நில்லாமல்
நிலம் தொட்டபோது
நினைவுகளும் நெஞ்சினின்று
நில்லாமல் நெருட ஆரம்பித்தன

மழைநாள் நிகழ்வுகள் கொஞ்சம்
மனதோடு உண்டு
நனைத்த மழைத்துளிகள்
காய்தலின் போது காணமல் போனது போல்.....

காகிதக் கப்பல் செய்து
கலங்கிய நீரோடையில்
களித்த அந்தத் தருணங்கள்
கவலை இல்லா காலங்கள்.....

நனைந்த மண்ணில் குத்தி
நெளிந்திடும் மண்புழுக்களை
நிறையவே சேர்த்த அந்த
நேர்மையான குழந்தைக் காலம்...

வகுப்பறையில் கேட்ட விப்ஜியார் என்பதற்கு
விண்வில்லின் நிறங்கள் மொத்தம்
ஏழையும் எண்ணிப் பார்க்க
ஏங்கியே நனைந்த காலம்....

மாடிவீட்டு மடையின் தண்ணீர்
மழையுடன் போட்டிபோட்டு
மண்ணிலே துளைக்கும் காட்சி
மறந்திடாமல் மனசுக்குள் மணிமணியாய்...

நனைந்தும் குளிர்ந்தும்
நாம் பெற்ற காய்ச்சலுக்கு
நடுக்கும் ஊசிக்குப் பயந்து யார்க்கும்
சொல்லாமல் கழித்த காலம்.....

குளத்தின் நீர் பெருகிவிட
கொக்குகளும் நாரைகளும்
மறுகால் பாயும் வெள்ளம கூடவே
மூழ்கியோர் மரணங்கள் கேட்ட காலம்....

ஈர மண்பரப்பில் இறங்கி நடக்கையிலே
என் சின்னப் பாதம் அழுந்த
நீர் கிளம்பும் விரல்வழியே
நின்று நீர்பர்த்து நிதானமாய் நடந்த காலம் ....

வகுப்பறையில் அமர்ந்திருக்க
வந்தது ஓர் அடை மழை
வயலில் உம்மாவுடன்
வாசனையுடன் வந்த மழை
என்னை சன்னல்புறத்தாக்கி
இடியோடு இடித்தமழை
அண்ணனின் திருமணத்தில்
அழைக்காமலே அரும்பிய மழை
ஓடிய என் காலங்களில்
ஒழுகிய நீர்த்தாரைகளில்
ஓரிரு சொட்டுகள் கூட
உண்மையாய் என்னோடு இல்லை...
நனைந்தேன் மகிழ்ந்தேன்
காய்ந்தேன் மறந்தேன்
நனைவதும் காய்வதும்
வெளியில் மட்டுமே
உள்ளே நிறைய ஈரம்
காய முடியாமல் கண்ணீரோடு... 



நீர்ச்சொட்டுக்கள் நில்லாமல்
நிலம் தொட்டபோது
நினைவுகளும் நெஞ்சினின்று
நில்லாமல் நெருட ஆரம்பித்தன

மழைநாள் நிகழ்வுகள் கொஞ்சம்
மனதோடு உண்டு
நனைத்த மழைத்துளிகள்
காய்தலின் போது காணமல் போனது போல்.....

காகிதக் கப்பல் செய்து
கலங்கிய நீரோடையில்
களித்த அந்தத் தருணங்கள்
கவலை இல்லா காலங்கள்.....

நனைந்த மண்ணில் குத்தி
நெளிந்திடும் மண்புழுக்களை
நிறையவே சேர்த்த அந்த
நேர்மையான குழந்தைக் காலம்...

வகுப்பறையில் கேட்ட விப்ஜியார் என்பதற்கு
விண்வில்லின் நிறங்கள் மொத்தம்
ஏழையும் எண்ணிப் பார்க்க
ஏங்கியே நனைந்த காலம்....

மாடிவீட்டு மடையின் தண்ணீர்
மழையுடன் போட்டிபோட்டு
மண்ணிலே துளைக்கும் காட்சி
மறந்திடாமல் மனசுக்குள் மணிமணியாய்...

நனைந்தும் குளிர்ந்தும்
நாம் பெற்ற காய்ச்சலுக்கு
நடுக்கும் ஊசிக்குப் பயந்து யார்க்கும்
சொல்லாமல் கழித்த காலம்.....

குளத்தின் நீர் பெருகிவிட
கொக்குகளும் நாரைகளும்
மறுகால் பாயும் வெள்ளம கூடவே
மூழ்கியோர் மரணங்கள் கேட்ட காலம்....

ஈர மண்பரப்பில் இறங்கி நடக்கையிலே
என் சின்னப் பாதம் அழுந்த
நீர் கிளம்பும் விரல்வழியே
நின்று நீர்பர்த்து நிதானமாய் நடந்த காலம் ....

வகுப்பறையில் அமர்ந்திருக்க
வந்தது ஓர் அடை மழை
வயலில் உம்மாவுடன்
வாசனையுடன் வந்த மழை
என்னை சன்னல்புறத்தாக்கி
இடியோடு இடித்தமழை
அண்ணனின் திருமணத்தில்
அழைக்காமலே அரும்பிய மழை
ஓடிய என் காலங்களில்
ஒழுகிய நீர்த்தாரைகளில்
ஓரிரு சொட்டுகள் கூட
உண்மையாய் என்னோடு இல்லை...
நனைந்தேன் மகிழ்ந்தேன்
காய்ந்தேன் மறந்தேன்
நனைவதும் காய்வதும்
வெளியில் மட்டுமே
உள்ளே நிறைய ஈரம்
காய முடியாமல் கண்ணீரோடு... 


செவ்வாய், ஜனவரி 17, 2012

மழை சேமிப்பவள்....



அன்றும் மழைபெய்தது
நனைந்தவாறு என் மகள்
ஒழுகிய நீர்த் தாரையை
பரிவோடு பார்த்தாள்
கிண்ணமொன்றில் பிடித்து
கொஞ்சமாய் வடிகட்டி
ஓடோடிச்சென்று தன் குடத்திலிட்டாள்...

அந்தக்குடத்தில்
ஏற்கெனவே கொஞ்சம் நீருண்டு.

அவள் சொல்வாள்
பலன் பாராது பிறர் செழிக்கப்
பொழிவதால் துளிகள் பரிசுத்தமென்று...

அவளிடம் நிறைய மழைகளின்
சேமிப்பு உண்டு..

எங்காவது வெளியூர் போனாலும்
மறக்காமல் கிண்ணமும் ஒரு
குப்பியும் அவளோடு கூட வரும்....

பொழிதலின் புனிதத்தை
புரிந்து உணர்ந்தவள் அவள்...

அவளது கல்லூரிப் படிப்புக்காய்
கசகசக்கும் வெயிலில்
கால் கடுக்க வரிசையில் நின்று
அங்குமிங்கும் அலைந்து
அனைத்தும் முடிந்து மகிழ்வுடன்
அவளருகில் வந்த போது
என் காதின் மடல் வழியே
ஒழுகிய நீர்த் தாரையை
பரிவோடு பார்த்தாள்
பட்டென எடுத்தாள் குப்பியை
விழப்போன வியர்வைதுளியை
வீழ்ந்திடாமல் பக்குமாய்
பத்திரப்படுத்தினாள் குப்பிக்குள்...

அவள் சொல்வாள்
பலன் பாராது பிறர் செழிக்கப்
பொழிவதால் துளிகள் பரிசுத்தமென்று...
அவளிடம் நிறைய மழைகளின்
சேமிப்பு உண்டு.. 


அன்றும் மழைபெய்தது
நனைந்தவாறு என் மகள்
ஒழுகிய நீர்த் தாரையை
பரிவோடு பார்த்தாள்
கிண்ணமொன்றில் பிடித்து
கொஞ்சமாய் வடிகட்டி
ஓடோடிச்சென்று தன் குடத்திலிட்டாள்...

அந்தக்குடத்தில்
ஏற்கெனவே கொஞ்சம் நீருண்டு.

அவள் சொல்வாள்
பலன் பாராது பிறர் செழிக்கப்
பொழிவதால் துளிகள் பரிசுத்தமென்று...

அவளிடம் நிறைய மழைகளின்
சேமிப்பு உண்டு..

எங்காவது வெளியூர் போனாலும்
மறக்காமல் கிண்ணமும் ஒரு
குப்பியும் அவளோடு கூட வரும்....

பொழிதலின் புனிதத்தை
புரிந்து உணர்ந்தவள் அவள்...

அவளது கல்லூரிப் படிப்புக்காய்
கசகசக்கும் வெயிலில்
கால் கடுக்க வரிசையில் நின்று
அங்குமிங்கும் அலைந்து
அனைத்தும் முடிந்து மகிழ்வுடன்
அவளருகில் வந்த போது
என் காதின் மடல் வழியே
ஒழுகிய நீர்த் தாரையை
பரிவோடு பார்த்தாள்
பட்டென எடுத்தாள் குப்பியை
விழப்போன வியர்வைதுளியை
வீழ்ந்திடாமல் பக்குமாய்
பத்திரப்படுத்தினாள் குப்பிக்குள்...

அவள் சொல்வாள்
பலன் பாராது பிறர் செழிக்கப்
பொழிவதால் துளிகள் பரிசுத்தமென்று...
அவளிடம் நிறைய மழைகளின்
சேமிப்பு உண்டு.. 

சனி, ஜனவரி 14, 2012

தமிழர் திருநாள்



மாடோட்டிப் பயிர் செய்தோம் மண்ணில் நித்தம்
மண்மணக்க விருந்திட்டோம் மனசில் நின்றோம்
காடெல்லாம் வீடாகி கழனியெல்லாம் காரோட
வீடின்றி வாசலின்றி விதிர்க்கின்றான் விவசாயி....

போனதெல்லாம் போகட்டும் போகியுடன் சாம்பலாய்
கானகத்தை காத்திடுவோம் கண்ணிமை போல் காவலாய்
ஊனமின்றிப் பாடுபட்டு உழவர் வாழ்வு ஓங்கவே
உண்மையுடன் வளர்த்திடுவோம் விவசாயத் தொழிலையே...

தமிழை நற்ப் பானையாக்கி தணலுக்குப் பகைகூட்டி
தாய்மைஎனும் நீரூற்றி அன்பு எனும் அரிசியிட்டு
சர்க்கரையாய் சகமனிதச் சமத்துவமும் அதில் சேர்த்துப்
பொங்கலோ பொங்கலென பொங்கட்டும் இன்ப வெள்ளம....

ஏரோடிய நிலமெல்லாம் எங்கள் நிலமே
நீரோடிய வயலெல்லாம் எங்கள வளமே
வேரோடிய தமிழர் குடி எங்கள் குடியே
பார் போற்றும் எங்கள் மொழி தங்கத்தமிழே...
அன்புடன் அப்துல்லாஹ்....


மாடோட்டிப் பயிர் செய்தோம் மண்ணில் நித்தம்
மண்மணக்க விருந்திட்டோம் மனசில் நின்றோம்
காடெல்லாம் வீடாகி கழனியெல்லாம் காரோட
வீடின்றி வாசலின்றி விதிர்க்கின்றான் விவசாயி....

போனதெல்லாம் போகட்டும் போகியுடன் சாம்பலாய்
கானகத்தை காத்திடுவோம் கண்ணிமை போல் காவலாய்
ஊனமின்றிப் பாடுபட்டு உழவர் வாழ்வு ஓங்கவே
உண்மையுடன் வளர்த்திடுவோம் விவசாயத் தொழிலையே...

தமிழை நற்ப் பானையாக்கி தணலுக்குப் பகைகூட்டி
தாய்மைஎனும் நீரூற்றி அன்பு எனும் அரிசியிட்டு
சர்க்கரையாய் சகமனிதச் சமத்துவமும் அதில் சேர்த்துப்
பொங்கலோ பொங்கலென பொங்கட்டும் இன்ப வெள்ளம....

ஏரோடிய நிலமெல்லாம் எங்கள் நிலமே
நீரோடிய வயலெல்லாம் எங்கள வளமே
வேரோடிய தமிழர் குடி எங்கள் குடியே
பார் போற்றும் எங்கள் மொழி தங்கத்தமிழே...
அன்புடன் அப்துல்லாஹ்....

வியாழன், ஜனவரி 12, 2012

அதிர்ந்ததால் உதிர்க்கிறேன்....



மரங்களடர்ந்த தோப்பில்
காவலாளியின் கவன்த்துக்குத் தப்பி
கனி ஒன்று வீழ்ந்து 
தரை தொட 

அசைந்த மரத்தின் 
ஆடிய கிளையின் 
அதன் கனிகளின் எண்ணிக்கையில் 
ஒன்று குறைகிறது....

கிளையொன்றில் ஓடிய 
அணிலின் சுழலும் பார்வைக்குள் 
வீழ்ந்த கனியின் உருளல்...

அதற்கு எதுவும் முக்கியமில்லை 
அசையாமல மடிப்பெற்ற 
அம்மரத்தையே தாங்கிய 
வனத்தின் தளத்தில்
கனியொன்று தரையுடன் கொண்ட 
புதிய உறவையோ 
அம்மரத்தின் இழப்பு சோகத்தையோ 
கனிக்கும் விருட்சத்திற்குமான 
அறுந்துபோன இணைப்பை
அற்றுப்போன உறவையோ..

அறியாத அணிலும் 
அந்தக் காவலாளியும் 
இன்னும் சில பறவைகளும் 
சிற்சில மரங்களும் 
கண்டும் காணாமல் 
அறிந்தும் அறியாமல் 
ஒன்றுமே நிகழாதது போல 
எல்லாமே நிகழ்கிறது அதுபோல் 

ஒவ்வொரு நாளும் 
 உன்னால் நான் அதிர்வதாலும்
துவண்டு போவதாலும்
உதிர்த்துக்கொண்டே இருக்கிறேன்
உன் பற்றிய என் நன்மதிப்பீடுகளை
அடியில் என் பாதம் சுற்றி 
இப்பொழுது நிறையக் கனிகளும்
சருகுகளும்......
அவற்றை 
நம்மைத்தவிர 
யாரும் கவனியாமல்
குப்பைகளாய்..... 




மரங்களடர்ந்த தோப்பில்
காவலாளியின் கவன்த்துக்குத் தப்பி
கனி ஒன்று வீழ்ந்து 
தரை தொட 

அசைந்த மரத்தின் 
ஆடிய கிளையின் 
அதன் கனிகளின் எண்ணிக்கையில் 
ஒன்று குறைகிறது....

கிளையொன்றில் ஓடிய 
அணிலின் சுழலும் பார்வைக்குள் 
வீழ்ந்த கனியின் உருளல்...

அதற்கு எதுவும் முக்கியமில்லை 
அசையாமல மடிப்பெற்ற 
அம்மரத்தையே தாங்கிய 
வனத்தின் தளத்தில்
கனியொன்று தரையுடன் கொண்ட 
புதிய உறவையோ 
அம்மரத்தின் இழப்பு சோகத்தையோ 
கனிக்கும் விருட்சத்திற்குமான 
அறுந்துபோன இணைப்பை
அற்றுப்போன உறவையோ..

அறியாத அணிலும் 
அந்தக் காவலாளியும் 
இன்னும் சில பறவைகளும் 
சிற்சில மரங்களும் 
கண்டும் காணாமல் 
அறிந்தும் அறியாமல் 
ஒன்றுமே நிகழாதது போல 
எல்லாமே நிகழ்கிறது அதுபோல் 

ஒவ்வொரு நாளும் 
 உன்னால் நான் அதிர்வதாலும்
துவண்டு போவதாலும்
உதிர்த்துக்கொண்டே இருக்கிறேன்
உன் பற்றிய என் நன்மதிப்பீடுகளை
அடியில் என் பாதம் சுற்றி 
இப்பொழுது நிறையக் கனிகளும்
சருகுகளும்......
அவற்றை 
நம்மைத்தவிர 
யாரும் கவனியாமல்
குப்பைகளாய்..... 


Related Posts Plugin for WordPress, Blogger...