சனி, செப்டம்பர் 03, 2011

நான் மனிதன்..abdhullah

பதிவு 1

பறந்து கிடக்கும் இந்தப் பார் முழுவதும் இணையத்தில் தமிழ் தளங்கள் இறைந்துகிடக்கின்றன...அப்படி ஒன்றில் நானும் அங்கத்தினன்...ஒரு நல்ல வாசகன் அருமையான பதிவு ஒன்றை இட்டான்...பதிவு நான் சார்ந்திருக்கும் மதத்திற்கு அப்பாற்பட்டது அதே நேரத்தில் அதன் கருத்துக்களில் ஒன்றிப் போன நான் அதற்க்கு ஒரு பின்னுட்டமும் இட்டேன்...
அருமை எனக்குப் பிடித்திருக்கிறதென்று...
உண்மை தான் என்னைப் பொறுத்த மட்டில் எப்பொருளிலும் மெய்ப்பொருள் தான் எனக்கு முக்கியம்...பெயரில் என்ன இருக்கிறது...அல்லா சிவன் இயேசு இவை பெயர் தான் எனக் கருதுபவன் நான். வழிபாட்டில் இறைவன் என்ற பரம்பொருள் ஒன்று மட்டுமே அதன் ஜிவனுள்ள கரு...இது என் கருத்து.
ஐவேளை தொழுபவன் இறைவனை எல்லா நேரமும் அஞ்சுபவன் நான் சார்ந்திருக்கும் மார்க்கத்திற்கு முரணான எந்தக் காரியங்களையும் மனத்தால் கூட தொடாதவன்...என் மாற்று மத சகோதரனுக்கு அவனது பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி பின்னுட்டமிடுகிறேன்...அவ்விதம் சொல்வது எனக்கும் அவனுக்கும் மகிழ்ச்சியைத் தரும் என்றால் இதில் மனிதாபிமானம் ஒன்று தான் விஞ்சி நிற்க முடியுமே ஒழிய நான் அவனது மதம் தான் சிறந்ததென்று கருதி என் மதத்தை இழிவு படுத்த வில்லை...ஆனால் என் பின்னுட்டத்தினை மேற்கோள் காட்டி விளம்பரமாக்கினால்...அது பக்கா அடாவடித்தனம் தான்...

நான் மனிதன், இந்தியன், முஸ்லிம், என் தாய் நாட்டை வெறித்தனமாக நேசிக்கும் ஒரு தேசபக்தன்...உலக முழுமையும் வாழும் முஸ்லிம்கள் ( மாற்றுமத சகோதரர்கள் )உங்களைப்போல் எனது உறவுமுறைகள் தான் இதில் எள்ளளவும் சந்தேகமில்லை....
அதற்காக ஒருவர் முஸ்லிம் என்பதற்காக என் கண்ணை முடிக்கொண்டு நான் அவர் செய்யும் தவறுகளை ஆதரிக்கப் போவதில்லை...

தேசத்தின் இதயமான நாடாளுமன்றத்தை தாக்க அண்டை நாட்டின் உதவியுடன் இந்த நாட்டில் பிறந்த ஒருவன் அவன் எந்த மதத்தை சார்ந்தவனாகவும் இருக்கலாம் துணிந்து உள்ளே நுழைந்து துப்பாக்கியும் கையுமாக அரங்க வளாகத்தை சூழ்ந்து வெடி வைத்தும் தாக்க வருவான் என்றால் அவன் என்னைப் பொறுத்தமட்டில் மன்னிக்க முடியாத குற்றம் செய்கிறான்...அதற்கான தண்டனை மரணம் என்றாலும் அவனது உயிரை துள்ளத் துடிக்க எடுக்க வேண்டும் இதில் மதமென்ன மார்க்கமென்ன? மனித உயிர்களின் மதிப்பு மட்டுமே முக்கியம்...

அது போல இந்த தேசத்தின் மதிப்பு வாய்ந்த பதவியில் உள்ள ஒருவரை திட்டமிட்டு கொலை செய்ய ஒரு கும்பல் ஆளனுப்ப அதற்கான வேலை முழுமை பெற்று கசாப்புக் கடையில் வெட்டப்பட்ட மாமிசங்கள் கூட அவற்றின் அங்கங்களைக் காட்டும் ஆனால் ஒரு நூறு மனித உடலங்களின் அங்கங்கள் உருத்தெரியாமல் சிதைக்கப்படக் காரணமானவர்கள் யாராயிருப்பினும் அவர்கள் செய்ததும் மன்னிக்க முடியாத குற்றமே...நிறைவேற்ற வேண்டும் தண்டனையை தாமதம் கூடாது...

இங்கே பிரச்சினை என்னவென்றால் காஷ்மிர முதல்வர் உமர அப்துல்லாஹ் ஒரு தேவையில்லாத விவகாரத்தை துண்டி விட்டிருக்கிறார்...ஒரு முன்று பேரின் துக்குத் தண்டனையை சட்டசபையில் தீர்மானம் இயற்றி நிறுத்த முடியும் என்றால் நாங்களும் அந்தப் பாராளுமன்றத்தை தாக்கியவரை விடுவிக்கச் சொல்லுவோம் என்று...
இந்த அப்துல்லாக்கள் யார்? இவர்களின் உள்நோக்கம் என்ன?  தெரியாது.... அனால ஒன்று உண்மை காங்கிரசு இங்கே கலக்குகிறது குட்டையை அதற்குத் தோதாக அப்போது தான் மீன் பிடிக்க முடியும் என்று ஒரு கீழான தரங்கெட்ட எண்ணம்....
அப்படி இந்த அப்துல்லாக்கள் பேசியது உண்மை என்றால் அது இந்த தேசத்திற்குப் பெரிய நாசம்...யாகாவாராயினும் நாகாக்க...என்பது தான் இதற்குப் பதில்...

3 கருத்துகள்:

  1. இதற்கு என்ன பதில் சொல்லுவதென்றே தெரியாமல் வாயடைத்து போய்விட்டேன்..

    ஒரு உயிரின் விலை எத்தனை மகத்தானது என்பதை அறியாமல்.... கொல்ல துணிந்துவிட்டார்கள்...

    மிருகங்கள் கூட தன் பசிக்கு தான் மற்ற மிருகங்களை கொல்லுவது...

    ஆனால் மனிதனின் பேராசை இருக்கிறதே அது கட்டுக்கடங்காதது..

    மனிதநேயம் மதத்திற்கும் அப்பாற்பட்டது....

    உங்கள் கருத்துடன் நானும் ஒத்து போகிறேன் அப்துல்லாஹ் சார்...

    மதம் சார்ந்த விஷயங்கள் எல்லாமே ரொம்ப சென்சிட்டிவ்....

    மனிதன் முதலில் அன்பை விதைக்கட்டும். சண்டைகள் மறையும் அங்கே.. சமாதானம் நிலவும் அங்கே...

    இங்கே மூன்று உயிர்கள் தூக்கில் தொங்க காத்திருப்பது எத்தனை கொடுமை என்று எல்லோரும் அந்த உயிர்களை காக்க தான் போராடுவது அஹிம்சா வழியில் தான் போராட்டமும்....

    செங்கொடியின் உயிர் தியாகமும் அதற்காக தான்....

    மூவரும் இந்த கொலையில் சம்மந்தப்பட்டிருந்தாலும் சம்மந்தப்படவில்லை என்றாலும் நீளமான 20 ஆண்டுகள் உலகத்துடனான தொடர்பை துண்டித்து தண்டனை அனுபவித்து அரை செத்த உயிரை இனி தூக்கில் போட்டு என்ன லாபம் :( ஹூம்

    வேதனை தான் மிஞ்சுகிறது அப்துல்லாஹ் சார்....

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு...

    பதிலளிநீக்கு
  2. உணர்வுப்பூர்வமான இந்தக் கட்டுரையில் என்னுடைய கருத்துக்களை தன் மனத்தால் வாசித்து மனிதாபிமானத்துக்கு தனது ஆதரவையும் கூறும் சகோதரிக்கு முதலில் என் நன்றி...
    சகோதரி நெடு நாட்களாக சிறையில் இருந்து தன் வாழ்க்கையை தொலைத்தவர்கள் பால அவரது இரக்கத்தை காட்டுவது சகோதரியின் கருணை உள்ளத்தை கண்ணாடி போல் காட்டுகிறது.
    கதம்ப உணர்வுகளில் விஞ்சி நிற்பது கருணை மட்டுமே...

    பதிலளிநீக்கு
  3. நீதி மன்றம் விசாரித்து குற்றவாளிகள் (உண்மை அவர்களின் மனசாட்சிக்கு மட்டுமே வெளிச்சம்)தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பளித்தும், அதை நிறைவேற்றமால், கிட்டத்தட்ட இருபது (20) வருட சிறைத் தண்டனைக்கு பிறகு தூக்கிலிட முடிவெடுத்தது ஏற்புடையதாக இல்லை.வாழ்நாள் சிறை தண்டனை தூக்குத் தண்டனையைவிட கொடுமையானது, இந்திய துணைக்கண்டத்தில் தூக்குத் தண்டனையை தடை செய்ய வேண்டும்!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...