சனி, செப்டம்பர் 03, 2011

பாழாய்ப் போன வரலாறு - அப்துல்லாஹ்



இடிந்து நிற்கும் பாழடைந்த வீடு 
எல்லோரும் கடந்து செல்லும் 
பாதையோரத்தில் பார்வைக்கு 
குருவியொன்று கட்டிய கூடும் 
கொஞ்சம் வைக்கோல் தூசிகளும்

பக்கத்தில் சென்று வாசனையை நுகர்ந்தேன்...
ஒரு வாப்பாவும் ஏழ் ஆண் மக்களைப் பெற்ற தாயும் 
வாழ்நது கெட்ட வீடாம் உம்மா சொன்னது நினைவில் 
கண்டியில் வியாபாரம் செய்தார் காரணர் 
மணிககையில் மல்லிகை சுற்றி 
மைனராய் வலம் வந்தவராம்..

கிருதாவின் நீளத்தில் கிறங்கிய கோழிகளை 
விருதாவாய் விழ்த்தியது தான் அவரின் 
வீணாய்ப்போன வரலாறு
நிதானம் இழந்து மது மயக்கமாக
நெறிகெட்ட வாழ்வில் நிலையிழந்து போனார்...

இடுக்கிய கண்களில் பாசம் வேண்டி ஏக்கத்தில் 
எஞ்சிய இற்றுப்போன நாட்களை கழித்தாராம்...

வாப்பாவுக்கு அருகில் கைத்தடி மட்டுமே 
பாவையின் முகம் பார்த்து பரவசப்படுத்திய 
பார்வை கைவிட்டு காத துரம் போனபின்பு 
நில்லாமல் பம்பரமாய் சுற்றிய கால்கள்
நிற்கவே முடியாது ஆட்டம் காண 

கிழவியும் போய்விட கிடை ஆடாய் மாறினாராம்
கஞ்சி தர ஆளில்லாமல் காட்டுப் பூவாய் கவனிப்பின்றி
கிடந்தே கடந்தாராம் கிழவனார் வாப்பாவும்..
உம்மா சொன்ன கதை உயிர் பெற்று ஓவியமாய்...
பாழடைந்த விடோன்று உள்ளம உடலால் 
பாழடைந்த ஒரு வரலாறு...




இடிந்து நிற்கும் பாழடைந்த வீடு 
எல்லோரும் கடந்து செல்லும் 
பாதையோரத்தில் பார்வைக்கு 
குருவியொன்று கட்டிய கூடும் 
கொஞ்சம் வைக்கோல் தூசிகளும்

பக்கத்தில் சென்று வாசனையை நுகர்ந்தேன்...
ஒரு வாப்பாவும் ஏழ் ஆண் மக்களைப் பெற்ற தாயும் 
வாழ்நது கெட்ட வீடாம் உம்மா சொன்னது நினைவில் 
கண்டியில் வியாபாரம் செய்தார் காரணர் 
மணிககையில் மல்லிகை சுற்றி 
மைனராய் வலம் வந்தவராம்..

கிருதாவின் நீளத்தில் கிறங்கிய கோழிகளை 
விருதாவாய் விழ்த்தியது தான் அவரின் 
வீணாய்ப்போன வரலாறு
நிதானம் இழந்து மது மயக்கமாக
நெறிகெட்ட வாழ்வில் நிலையிழந்து போனார்...

இடுக்கிய கண்களில் பாசம் வேண்டி ஏக்கத்தில் 
எஞ்சிய இற்றுப்போன நாட்களை கழித்தாராம்...

வாப்பாவுக்கு அருகில் கைத்தடி மட்டுமே 
பாவையின் முகம் பார்த்து பரவசப்படுத்திய 
பார்வை கைவிட்டு காத துரம் போனபின்பு 
நில்லாமல் பம்பரமாய் சுற்றிய கால்கள்
நிற்கவே முடியாது ஆட்டம் காண 

கிழவியும் போய்விட கிடை ஆடாய் மாறினாராம்
கஞ்சி தர ஆளில்லாமல் காட்டுப் பூவாய் கவனிப்பின்றி
கிடந்தே கடந்தாராம் கிழவனார் வாப்பாவும்..
உம்மா சொன்ன கதை உயிர் பெற்று ஓவியமாய்...
பாழடைந்த விடோன்று உள்ளம உடலால் 
பாழடைந்த ஒரு வரலாறு...


3 கருத்துகள்:

  1. படிக்கும்போதே உள்ளம் நடுங்குவதை உணரமுடிகிறது அப்துல்லாஹ் சார்...

    ஒழுக்கமாய் வாழ வழி இருந்தும் சொகுசும் இளமையும் ஆட்டம் போட வீட்டில் உத்தமியாய் இருக்கும் மனைவி எட்டிக்காயாக கசக்க.....

    நாளுக்கொன்றாய் விருந்துண்டு இரத்த திமிரில் ஆடிய ஆட்டமெல்லாம் மைனரோடு நிற்காமல் அவர் குடும்பத்தையும் உருக்குலைத்திருக்கும் கண்டிப்பாக....

    அன்றைய நாளின் ஆட்டங்களை வயோதிகம் வந்தப்பின் அசைபோட மட்டுமே முடிந்தது பாவம் அவரால்....

    இளமைத்திமிரால் பெண்களை வளைத்துப்போட்டு கூறுபோட்டவரால் முதுமையில் கஞ்சி வைத்து தரக்கூட ஆளில்லாமல் கிடந்தது கண்முன் தெரிந்தது..

    வரிகளின் காட்சிகள் கண்முன்னே நடப்பதை அறிய முடிந்தது அப்துல்லாஹ் சார்...

    எத்தனை பணம் இருந்து என்ன? எத்தனை அழகிருந்து என்ன? உத்தமனாய் இருக்காது போனதால் அனாதைப்பிணமாக தான் இறுதியில் கண்மூட முடிந்தது....

    உற்றோரும் மற்றோரும் உடனிருக்க அழுகையில் உடல் உயிரற்று கிடக்க ஆத்மா மனம்கொள்ளா பூரிப்புடன் பார்க்குமாம் தன் மறைவுக்கு பின்னரும் தான் எப்படி கௌரவிக்கப்படுகிறோம் என்று...

    அந்த கௌரவம் இந்த வாப்பாவுக்கு கிடைக்க வழி இல்லாமல் போனது சோகம்...

    இந்த கவிதை கண்டிப்பாக எல்லாருக்குமே ஒரு பாடமாக அமைந்தது சிறப்பு அப்துல்லாஹ் சார்...

    சிறப்பான கவிதை படைத்தமைக்கு அன்பு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. கவிதைகளின் வரிகள் சுமக்கும் அதன் கனமான பொருளை விட சகோதரியின் பின்னுட்டத்தின் வீரியமிக்க விளக்கத்தால் மிளிர்கிறது எனது படைப்பு...
    அலையோட்டத்தில் நீரைக் கிழித்து முன்னேறிச்செல்லும் ஒரு படகு...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...