திங்கள், செப்டம்பர் 19, 2011

மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்


















அன்பு எனும் மாயமந்திரம் 
மனதுக்குள் நிகழ்ந்தபோது 

என்காலடிகளைக் கூட 
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட 
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய் 
உள்ளிழுத்து விட்டேன் 

வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால் 
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு 
வாசலை அடைத்தேன்...

காண்பவை கருத்தை 
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு 
கண்ணிரண்டின் காட்சியை 
முடக்கி விட்டேன் 

இறந்து போன நிகழ்வுகளின் 
வேட்டைக் களமாக
மனம் மாறியதால் 
இறந்து இறந்து 
நான் இன்னலுடன் 
வாழ்வதை தவிர்க்க 
இதயத்தின் இதயத்தை 
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன 
சருகைப் போன்ற நான் 
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும் 
அன்பைச் செலுத்த 
ஆசைப்பட்ட போது...

என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ 
நான் ஒரு சூனியம்...

















அன்பு எனும் மாயமந்திரம் 
மனதுக்குள் நிகழ்ந்தபோது 

என்காலடிகளைக் கூட 
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட 
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய் 
உள்ளிழுத்து விட்டேன் 

வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால் 
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு 
வாசலை அடைத்தேன்...

காண்பவை கருத்தை 
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு 
கண்ணிரண்டின் காட்சியை 
முடக்கி விட்டேன் 

இறந்து போன நிகழ்வுகளின் 
வேட்டைக் களமாக
மனம் மாறியதால் 
இறந்து இறந்து 
நான் இன்னலுடன் 
வாழ்வதை தவிர்க்க 
இதயத்தின் இதயத்தை 
இல்லாமல் ஆக்கினேன்

காய்ந்து போன 
சருகைப் போன்ற நான் 
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும் 
அன்பைச் செலுத்த 
ஆசைப்பட்ட போது...

என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ 
நான் ஒரு சூனியம்...

9 கருத்துகள்:

  1. //
    காண்பவை கருத்தை
    சேதப்படுத்துகின்றன..
    அழுதழுது வற்றி
    கண்ணீரின்றி வறண்டு
    வலிக்கும் என் முகத்திரண்டு
    கண்ணிரண்டின் காட்சியை
    முடக்கி விட்டேன்
    //

    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  2. ராஜா வாங்க ..
    உங்களின் வாசித்தலுக்கு வசப்பட்ட என் கவிதை புண்ணியம் பெற்றது... உங்களின் வரிகள் எனது பாக்கியம் நன்றி...
    மகிச்சியில் ஒரு அலை உயரே....

    பதிலளிநீக்கு
  3. மழையில் அழுகிறேன் அற்புதமான தலைப்பு மழையில் நனைந்து எத்தனை அழுதாலும் அந்த கண்ணீர் வெளியில் தெரிவதில்லை அற்புதம் சகோ
    அன்பு எனும் மாயமந்திரம்
    மனதுக்குள் நிகழ்ந்தபோது

    இது நிகள்ந்துவிட்டால் அதில் தத்தளித்து மீள்வது கடினம் அந்த அன்பை பாதுகாப்பதிலும் அவற்றை போற்றுவதிலும் உள்ள பாடு இருக்கே ரொம்ப விவரமானது
    என்னில் எதுவும் இல்லாது
    இங்கே உறவுகள் சூழ
    நான் ஒரு சூனியம்.


    உறவுகளின் அன்பில் திழைத்து உங்களை ஒன்றுமில்லை என்று காட்டியிருப்பது மிகவும் வலிமை மிக்கதாக திகள்கிறது சகோ பாராட்டுகள் மகிழ்கிறது மனம் உங்களின் அன்பில் நாங்களும் என்றுணர்நது

    சேனையில் கவிஞர் ஹாஷிம்
    http://www.chenaitamilulaa.net/t21547-topic#206604

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான வரிகள் சிறப்பான கவிதை என்று சொன்னால்
    அது மிகையாகாது
    வரிகளை வாசிக்கையில் மனதை வருடும் ஓர் உணர்வு
    அது ஒரு தலை சிறந்த கவிஞனின் கவியாளுமை

    மனதை தொடும்வரிகள் சிறப்பு
    ஆசிரியர் பெருந்தொகைக்கு என் நன்றி....


    சேனையில் கவிஞர் செய்தாலி நுகர்ந்து பகர்ந்தவை....

    http://www.chenaitamilulaa.net/t21547-topic#206604

    பதிலளிநீக்கு
  5. தோழர் கலை நிலா சேனையில்...

    அழுதது யாருக்கு தெரியும்
    மழையோடு எனது கண்ணீரை!

    தலைப்பே ஒரு கவிதை.

    உள்ளத்தின் ஆணவத்தை,
    ஆணவம் மனதுக்குள் இருந்த போது
    ஏற்ப்பட ரணம் ,
    அதிலும் ஒரு மனித நேயமும்
    ஒட்டிக்கொள்ள ,
    தனிமைக்குள் போன ஒருவன்,
    எல்லாமே கடந்து ,தேடும் போது ,

    தனிமையை சொன்ன பாங்கு

    உங்க தலைப்பு !இதை விட ஒரு படைப்பாளி
    அழகாய் சொல்லவே முடியாது .

    ஒவ்வொரு மனிதனின் மனமும்
    சற்று ,பார்க்கும் நிலை தான் உங்க வரிகள் .

    பாரட்டுக்கள் தோழரே .பாராட்டுக்கள் .

    http://www.chenaitamilulaa.net/t21547-topic#206604

    பதிலளிநீக்கு
  6. உங்களை நீங்களே சார்ன்னு தான் கூப்பிடுவிங்களா?

    ப்ளாக் ஐடி அப்துல்லாசார்ன்னு இருக்கு?!

    :)

    பதிலளிநீக்கு
  7. ஆமா...
    மத்தவங்க கூப்பிட மாட்டேங்கறாங்க அதான் நானே...
    இப்படிக்கு
    அப்துல்லாஹ் சார்

    பதிலளிநீக்கு
  8. மழையில் அழுகை நல்லாயிருக்கு அப்துல்லாஹ் சார்.

    பதிலளிநீக்கு
  9. அன்பு பாலா தங்களின் மேலான கருத்து என் பாக்கியம்...
    நன்றி.... வாசித்து கருத்து கூறிய உங்களின் நல்ல மனதுக்கு...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...