பனிரண்டு வயசிலும் எனை இடுப்பில் சுமந்து
கண்கொத்திப் பாம்பாய் என் நல்லது கெட்டதுகளை
எனக்குச்சொல்லிய என் மீது உயிராய் இருந்து
பாசத்தை எனக்கு மட்டும் அளித்த
உம்மாவைக் காணவில்லை
அவளுக்கு இப்போது பேரன் பேத்திகள்
தான் உலகமாயிற்று
தோழி தந்த தின் பண்டத்தை ஒளித்து வைத்து
என் தம்பி ஆசையாய் தின்பான் என்றும்
அங்கே போகாதே அதைச் செய்யாதே...
என் வேலியாய் எனைச் சூழ்ந்து என்னைப் பேணி
அன்புடன் கவனித்த அக்காவையும் காணவில்லை
அவளுக்குத தன வீடு தன்கணவர் மற்றும் தன்பிள்ளைகள்
தான் உலகமாயிற்று
எங்கெல்லாம் சுற்றினாலும் என்னையும் கைசேர்த்து
விளையாட பள்ளிக்கூடம் சினிமா கடைவீதி
பங்கு வைத்து பகிர்ந்து தின்ற பண்டங்கள்
எச்சில் நனைந்த இத்தனை நினைவுகளும்
நட்புடன் பகிர்ந்த நண்பர்களைக் காணோம்
பணியும் பிணியும் பிள்ளைகளும் மனைவியுமாய்
அவர்களின் உலகம் மாறிவிட்டது...
என் தம்பி என் உயிர் அவன் எங்கள் செல்லம்
தன் காசையும் எனக்குத் தந்து செலவு செய்வதை
ஆசையுடன் கண்டு வாஞ்சையுடன் எனை வளர்த்த
அண்ணன் அவனது இரக்க குணமுள்ள அன்பு
இவையெல்லாம் போன இடம் தெரியவில்லை
அவனுக்கு அவன் மனைவி அவன் பிள்ளைகள்
அவனை பதினாறு ஆண்டுகளாக சந்திக்க கூடஇல்லை
நாலணாவுக்கு கடன் தந்தாலும் திருப்பிக் கேட்காத
அத்தா கடையும் இல்லை அவரது அன்பும் இல்லை
நல்லம்மாவின் வெற்றிலை எச்சில் படிந்த
எங்கள் வீ ட்டு சுவர் கூட இன்று இல்லை
திண்ணையில் பாய் விரித்து அமர்ந்து திட்டினாலும்
எனக்கு அரபு பாடத்தை அன்பாய் கற்றுத்தந்த நல்லாப்பா
ஒரு நாளைக்கு பள்ளிக்கு வராவிட்டாலும்
வீட்டுக்கு ஓடிவந்து விவரம் சொல்லி என்னை
அடித்தாலும் அன்பொழுகக் கற்றுத்தந்த ஆசிரியர்கள்
யாரும் இன்று என்னுடன் அப்படி இல்லை...
அவர்கள் என்னிடம் விதைத்துச் சென்ற அன்பு மட்டும்
ஈரம் காயாமல் அப்படியே அடிநெஞ்சில் உண்டு...
ஆமாம் காலையில் ஈர வானில் தன் வண்ணம் காட்டிய
அந்த வானவில்லை இப்போது காணவில்லை...